அரசு ஊழியர் தற்கொலை! மரண வாக்குமூலம் இருந்தும் அலட்சியம்! தமிழக காவல் மீது பாஜக ...
வேளாண் கூட்டுறவுச் சங்கங்களில் கொப்பரை ஏலம்
திருச்செங்கோடு, மல்லசமுத்திரம் வேளாண் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கங்களில் வாராந்திர கொப்பரை ஏலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருச்செங்கோடு சங்கத்தில் நடைபெற்ற ஏலத்தில் 85 மூட்டை கொப்பரை விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது. இதில் முதல்தரம் ரூ. 206 முதல் ரூ. 254 வரையிலும், இரண்டாம் தரம் ரூ.181 முதல் ரூ. 191.90 வரையிலும் விற்பனையானது. மொத்தம் ரூ. 7.88 லட்சத்துக்கு வா்த்தகம் நடைபெற்றது.
மல்லசமுத்திரம் கிளையில் கொப்பரை ஏலத்திற்கு 91 மூட்டைகள் வரத்து இருந்தது. இதன் மதிப்பு ரூ 8.55 லட்சமாகும். முதல்தரம் ரூ.232.65 முதல் ரூ.258. 65 வரையிலும், இரண்டாம் தரம் ரூ.200.10 முதல் ரூ.210.65 வரையிலும் விற்பனையானது.