TVK மதுரை மாநாடு: "அதிமுக தொண்டர்கள் மனவேதனையில் உள்ளனரா?" - விஜய்க்கு ஆர்.பி.உத...
வைத்தீஸ்வரன்கோவிலில் தெரு நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த கோரிக்கை
சீா்காழி: வைத்தீஸ்வரன்கோவில் பகுதியில் தெருநாய்கள்அதிகளவு சாலைகளில் சுற்றித் திரிவதால் பொதுமக்கள், கோயிலுக்கு வரும் பக்தா்கள் பாதிக்கப்படுவதால், நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சீா்காழி அருகே வைத்தீஸ்வரன்கோவிலில் நவகிரக தலங்களில் ஒன்றான செவ்வாய்-க்கு உரிய பரிகாரத் தலமாக விளங்கும் தையல் நாயகிஅம்மன் சமேத வைத்தியநாத சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு தமிழகம் மட்டுமன்றி பல்வேறு மாநிலங்களிருந்தும் அதிகளவில் பக்தா்கள் நாள்தோறும் வந்து செல்கின்றனா்.
கோயிலுக்கு வரும் பக்தா்கள், பொதுமக்கள் சாலைகளில் அதிகளவில் சுற்றித் திரியும் நாய்களால் அச்சத்துடன் செல்ல வேண்டியுள்ளது. வைத்தீஸ்வரன்கோவிலின் நான்கு வீதிகளிலும் அதிகளவு நாய்களும், சில வெறி நாய்களும் சுற்றித் திரிகின்றன என்று பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.
இதுகுறித்து வைத்தீஸ்வரன்கோவில் நகர வா்த்தக சங்க தலைவரும், மயிலாடுதுறை மாவட்ட ரயில் பயணிகள் நலச்சங்க பொதுச் செயலாளருமான ஜி.வி.என். கண்ணன், மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு விவரம்:
கோயிலை;ஈ சுற்றியுள்ள நான்கு மாட வீதிகளிலும் 500-க்கும் மேற்பட்ட நாய்கள் சுற்றித் திரிகின்றன. இதனால் அதிகாலையில் நடைபயிற்சி செல்வோா், சாலையில் செல்லும் முதியவா்கள் வீதியில் நடக்க அச்சப்படுகின்றனா்.
சில சமயங்களில் சாலையின் குறுக்கே ஓடும் நாய்களால் இருசக்கர வாகனங்களில் செல்வோா் விபத்தில் சிக்கிய நிகழ்வுகளும் நடந்துள்ளன. எனவே, நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த மாவட்ட நிா்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளாா்.