நத்தம் அருகே நடந்த மீன் பிடித் திருவிழாவில் 1000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
ஷெப்பர்ட் அதிவேக அரைசதம்: சென்னை அணிக்கு 214 ரன்கள் இலக்கு
சென்னைக்கு எதிரான அட்டத்தில் ஷெப்பர்ட்டின் அதிவேக அரைசதத்தால் பெங்கரூரு அணி 213 ரன்கள் குவித்துள்ளது.
ஐபிஎல் தொடரின் 52வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் சனிக்கிழமை விளையாடுகின்றன. பெங்களூரு மைதானத்தில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
இதனையடுத்து, ஆர்சிபி முதலில் பேட் செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ஜேக்கப் பெத்தேல், விராட் கோலி இருவரும் ஆரம்ப முதலே அதிரடியாக ஆடினர். இருவரும் அரைசதம் கடந்து ஆட்டமிழந்தனர். பெத்தேல் 55(33 பந்துகள்), விராட் கோலி 62(33 பந்துகள்) ரன்கள் சேர்த்தனர்.
அடுத்து களம்கண்ட வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். இந்த நிலையில் உள்ளே வந்த ஷெப்பர்ட் ஆட்டத்தில் அனல் பறந்தது. அவர் 14 பந்துகளில் 53 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன்மூலம் ஐபிஎல் தொடரில் அதிவேகமாக அரைசதம் கடந்த வீரர்களில் அவர் 2ஆம் இடத்தில் உள்ளார்.
இந்திய அணியின் சிறந்த கேப்டனாக மாறவிருக்கும் ஷுப்மன் கில்: ரஷித் கான்
அதில் ஜெய்ஸ்வால் முதலிடத்தில் உள்ளார். அவர் 13 பந்துகளில் அரைசதம் கடந்துள்ளார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் பெங்களூரு அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 213 ரன்கள் எடுத்தது.