Vikatan Digital Awards 2025: டிஜிட்டல் நாயகர்களை அங்கீகரிக்கும் மேடை; சென்னையில்...
ஷ்ருதி ஹாசன் வெளியிட்ட கும்கி 2 முதல் பார்வை போஸ்டர்!
இயக்குநர் பிரபு சாலமன் இயக்கியுள்ள கும்கி 2 படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது.
பென் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள கும்கி 2 விரைவில் திரைக்கு வருமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் பிரபு சாலமன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, லக்ஷ்மி மேனன் நடிப்பில் கடந்த 2012இல் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
தற்போது, சுமார் 13 ஆண்டுகளுக்குப் பிறகு இதன் இரண்டாம் பாகம் வெளியாகிறது. இதன் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது.
நடிகை ஷ்ருதி ஹாசன் இந்தப் போஸ்டரை வெளியிட்டுள்ளார். இந்தப் படத்தில் நடிகர் அர்ஜுன் தாஸ் நாயகனாக நடித்துள்ளதாகத் தெரிகிறது.
படக்குழு வெளியிட்ட எக்ஸ் பதிவில் அர்ஜுன் தாஸ், ஷ்ரித்தா ராவ், மதி பெயர்கள் டேக் செய்யப்பட்டுள்ளன. விரைவில் திரைக்கு வருமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Happy to Release the First look of #Kumki2
— shruti haasan (@shrutihaasan) September 12, 2025
I am a fan of human-animal bond classics.
Waiting for this one #Kumki2FirstLook#BornAgain@PenMovies@jayantilalgada@gada_dhaval@prabu_solomon@mynnasukumar@mathioffl@ShritaRao@Vj_andrewsmaapu@iam_arjundas… pic.twitter.com/Su49Xwc8qO