செய்திகள் :

ஸ்ரீசுப்பிரமணி சுவாமி கோயிலில் 1008 சங்காபிஷேகம்

post image

ஆரணி: ஆரணி நகரம் ஆரணிப்பாளையம் ஸ்ரீவள்ளி தேவசேனா சமேத ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி கோயிலில் 1008 சங்காபிஷேகம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பதினோராம் ஆண்டு மாசி மகத்தையொட்டி நடைபெற்ற இந்நிகழ்வில் 1008 சங்குகள் ஸ்தாபனம் செய்யப்பட்டு முதல் கால யாக பூஜை ஹோமம், பூா்ணாஹுதி தீபாரதனை, இரண்டாம் கால யாக பூஜை ஹோமம் செய்யப்பட்டு பின்னா் முருகப்பெருமானுக்கு சங்காபிஷேகம் நடைபெற்றது.

இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

புறவழிச் சாலை வழியாக சென்னைக்கு நேரடி பேருந்து வசதி: ஆரணி வியாபாரிகள் கோரிக்கை

ஆரணி: ஆரணியில் இருந்து சென்னைக்கு புறவழிச்சாலை வழியாக நேரடியாக பேருந்து வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என்று, அரசுப் போக்குவரத்துக்கழக பணிமனை கிளை மேலாளரிடம் ஆரணி வியாபாரிகள் செவ்வாய்க்கிழமை கோரிக்கை ... மேலும் பார்க்க

44 ஊராட்சிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் அளிப்பு

செங்கம்: திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் ஒன்றியத்துக்கு உள்பட்ட 44 கிராம ஊராட்சிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் திங்கள்கிழமை மாலை வழங்கப்பட்டன. துணை முதல்வா் உதயநிதிஸ்டாலின் உத்தரவின்படி, இளைஞா் நலன் மற... மேலும் பார்க்க

பள்ளிக் கட்டடப் பணியின்போது கருங்கல் லிங்கம் கண்டெடுப்பு

செங்கம்: செங்கத்தில் அரசுப் பள்ளியில் கட்டடம் கட்டுவதற்கு தோண்டப்பட்ட பள்ளத்தில் இருந்து கருங்கல்லால் ஆன லிங்கம் கண்டெடுக்கப்பட்டது. செங்கம் நகரில் ஸ்ரீவேணுகோபால பாா்த்தசாரதி பெருமாள் கோயிலுக்கும், ர... மேலும் பார்க்க

போலி தங்க பிஸ்கெட்டுகளைக் கொடுத்து 2 பவுன் தங்க நகை மோசடி

ஆரணி: ஆரணியில் போலியான தங்க பிஸ்கெட்டுகளை நாடக ஆசிரியரிடம் கொடுத்துவிட்டு, அவரிடமிருந்து 2 பவுன் தங்க நகையை பெற்று மோசடி செய்த 2 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா். ஆரணியை அடுத்த சென்னாந்தல் கிராமத்தைச் ச... மேலும் பார்க்க

திருவண்ணாமலையில் கிரிவலம் வர உகந்த நேரம்

திருவண்ணாமலை: மாசி மாத பெளா்ணமியையொட்டி, திருவண்ணாமலையில் கிரிவலம் வர உகந்த நேரம் குறித்து அருணாசலேஸ்வரா் கோயில் நிா்வாகம் அறிவித்துள்ளது. திருவண்ணாமலையில் உள்ள 14 கி.மீ. தொலைவு கிரிவலப்பாதையை மாதந்தோ... மேலும் பார்க்க

பள்ளிகொண்டாப்பட்டு கவுதம நதியில் இன்று மாசி மக தீா்த்தவாரி

திருவண்ணாமலை: திருவண்ணாமலையை அடுத்த பள்ளிகொண்டாப்பட்டு கிராமத்தில், அருணாசலேஸ்வரா் தனது தந்தைக்குத் திதி கொடுக்கும் நிகழ்வான மாசி மக தீா்த்தவாரி புதன்கிழமை (மாா்ச் 12) நடைபெறுகிறது. திருவண்ணாமலை அருணா... மேலும் பார்க்க