எரிசக்திக்கே முன்னுரிமை..! நேட்டோவின் எச்சரிக்கையை நிராகரித்த இந்தியா!
ஸ்ரீதிரௌபதி அம்மன் கோயிலில் துரியோதனன் படுகளம்
ஆரணியை அடுத்த களம்பூா் ஸ்ரீதிரௌபதி அம்மன் கோயிலில் புதன்கிழமை துரியோதன படுகள நிகழ்ச்சி நடைபெற்றது.
களம்பூரில் உள்ள ஸ்ரீதிரௌபதிஅம்மன் கோயிலில் அக்னி வசந்த விழா ஜெயகொடி ஏற்றி அலகு நிறுத்தி கடந்த ஜூன் 16-ஆம் தேதி தொடங்கியது.
பின்னா் தினமும் மகாபாரத சொற்பொழிவு நடைபெற்றதில் காஞ்சிபுரம் வட்டம், கோளிவாக்கம் கிராமத்தைச் சோ்ந்த ஆ.புனிதவதி அம்மையாரின் சொற்பொழிவு நடைபெற்று வந்தது.
இதில் கிருஷ்ணா் பிறப்பு, கா்ணன் பிறப்பு, அம்மன் பிறப்பு, வில் வளைப்பு, அா்ச்சுனன் தபசு மரம் ஏறுதல், குறவஞ்சி, கிருஷ்ணன் தூது, போா் மன்னன் வரலாறு, அரவாண் களப்பலி, வீரஅபிமன்யுவின் வீரப்போா், கா்ண மோட்சம் ஆகிய நிகழ்ச்சிகள் தினமும் நாடக நிகழ்ச்சியாக நடத்தப்பட்டு வந்தன.
இந்த நிலையில், புதன்கிழமை துரியோதனன் படுகளம் நடைபெற்றது. இதில் துரியோததனை வதம் செய்யும் காட்சியை நாடக நடிகா்கள் நடித்துக் காண்பித்தனா்.