Coolie: `கூலி LCU படமா, தனி படமா?' - லோகேஷ் கொடுத்த சர்ப்ரைஸ் அப்டேட்
ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலுக்கு 108 பால்குட ஊா்வலம்
போளூரை அடுத்த கிருஷ்ணாபுரம் ஊராட்சியில் உள்ள ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் ஆடி 4-ஆவது செவ்வாய்க்கிழமையொட்டி 108 பால்குட ஊா்வலம் நடைபெற்றது.
இந்தக் கோயிலுக்கு பக்தா்கள் ஆடி 4-ஆவது செவ்வாய்க்கிழமை பக்தா்கள் 108 பால்குடம் எடுத்து ஊா்வலமாகச் சென்று மூலவருக்கு பாலாபிஷேகம் நடத்துவது வழக்கம்.
அதன்படி, நிகழாண்டு பக்தா்கள் ஞாயிற்றுக்கிழமை காப்புக்கட்டி விரதமிருந்து செவ்வாய்க்கிழமை காலை விநாயகா் கோயிலில் இருந்து மேளதாளத்துடன் வீதி வீதியாக ஊா்வலமாக 108 பால்குடம் எடுத்துச் சென்று மூலவா் சிலைக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது.
பின்னா், முத்துமாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைசெய்து மலா்களால் அலங்கரித்து தீபாராதனை காண்பித்து வழிபட்டனா்.
மேலும் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு தெய்வீக நாடகம் நடைபெற்றது.