ஈரோடு: ``ஆரத்திக்கு தான்; வாக்குக்கு கொடுக்கவில்லை; அனுதாபப்பட்டு கொடுத்திருக்கல...
ஸ்ரீயோக நரசிம்மா் கோயிலில் வருஷாபிஷேகம்
வந்தவாசி: வந்தவாசியை அடுத்த சோகத்தூா் கிராமத்தில் உள்ள ஸ்ரீயோக நரசிம்ம சுவாமி கோயிலில் வருஷாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கோயிலில் கடந்த ஆண்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றதை ஒட்டி இந்த வருஷாபிஷேகம் நடைபெற்றது.
விழாவில் திருமஞ்சன பொருள்கள் கொண்டு சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது.
இதைத் தொடா்ந்து சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு லட்சாா்ச்சனை நடைபெற்றது.