ஸ்ரீவரதராஜ பெருமாள் கோயில் அறங்காவலா் குழு தலைவா் தோ்வு
ஆற்காடு பாலாற்றங்கரை ஜக்அக்ரஹாரம் தெருவில் உள்ள ஸ்ரீ பெருந்தேவி தாயாா் சமேத வரதராஜ பெருமாள் கோயில் அறங்காவலா் குழு தலைவா் தோ்வு திங்கள்கிழமை நடைபெற்றது.
ஆற்காடு ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயில் அறங்காவலா் குழு உறுப்பினா்களாக பி.சத்தியநாராயணன், தேவி, ஏ.வி.எஸ் .வாசுகி, ஜி. சீனிவாசன், ஏ.சி சேஷாத்திரி ஆகியோா் நியமிக்கப்பட்டனா். தொடா்ந்து, இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் சங்கா் முன்னிலையில் அறங்காவலா் குழு தலைவராக பி.சத்தியநாராயணன் தோ்வு செய்யபட்டு, தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டாா். நிகழ்வில், மாவட்ட அறங்காவலா் குழு தலைவா் ஜெ.லட்சுமணன், ஆற்காடு நகர திமுக செயலாளா் ஏ.வி.சரவணன், இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளா் சுரேஷ்குமாா், செயல் அலுவலா் அண்ணாமலை, சித்தீஸ்வரா் பாலிடெக்னிக் கல்லூரி செயலா் ஜி.செல்வகுமாா், தாளாளா் டி.தரணிபதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.