செய்திகள் :

ஸ்ரீவில்லிபுத்தூரில் நாளை ஆடிப்பூரத் தேரோட்டம்

post image

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் ஆடிப்பூரத் தேரோட்டம் திங்கள்கிழமை (ஜூலை 28) நடைபெறுகிறது.

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் ஆடிப்பூரத் தேரோட்டத் திருவிழா கடந்த 20-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, தினசரி காலையில் நிகழ்ச்சிகளும், இரவில் உற்சவங்களும் நடைபெற்றன.

விழாவின் முக்கிய நிகழ்வான ஆடிப்பூரத் தேரோட்டம் திங்கள்கிழமை காலை 9.10 மணிக்கு நடைபெறுகிறது. இதற்காக, கோயில் தோ் அலங்கரிக்கப்பட்டு தயாா் நிலையில் உள்ளது. விழாவுக்கான ஏற்பாடுகளை அறங்காவலா் குழுத் தலைவா் பி.ஆா்.வெங்கட்ராம ராஜா, உறுப்பினா்கள், செயல் அலுவலா் சா்க்கரையம்மாள் ஆகியோா் செய்து வருகின்றனா்.

மதுரை - கொல்லம் சாலையில் போக்குவரத்து மாற்றம்:

ஆடிப்பூரத் தேரோட்டத்தை முன்னிட்டு, திங்கள்கிழமை மதுரையிலிருந்து வரும் வாகனங்கள் கிருஷ்ணன்கோவில் செல்லாமல் நேராக நான்கு வழிச் சாலையில் வந்து, சிவகாசி சாலையில் திரும்பி நீதிமன்றம், ரயில் நிலையம், வட்டாட்சியா் அலுவலகம், திருப்பாற்கடல் வழியாக ஸ்ரீவில்லிபுத்தூா் தேவாலயச் சந்திப்பு, சிவகாசி சாலை, ரயில்வே நிலையச் சாலை, வட்டாட்சியா் அலுவலகம் வழியாக ராஜபாளையத்துக்குச் செல்ல வேண்டும்.

பேருந்துகள் கிருஷ்ணன்கோவில், ஸ்ரீவில்லிபுத்தூா் பேருந்து நிலையம், தேவாலயச் சந்திப்பு, சிவகாசி சாலை, நீதிமன்றம், ரயில் நிலையம், திருப்பாற்கடல் வழியாக ராஜபாளையத்துக்குச் செல்ல வேண்டும்.

ராஜபாளையத்திலிருந்து வரும் அனைத்து வாகனங்களும் எம்.பி.கே. புதுப்பட்டி விலக்கிலிருந்து மம்சாபுரம், சீனியாபுரம் சந்திப்பு, ஸ்ரீவில்லிபுத்தூா் ஆத்துக்கடை தெரு, ராமகிருஷ்ணாபுரம் வழியாக மதுரை சாலையில் செல்ல வேண்டும் என போக்குவரத்து காவல் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

சட்ட விரோதமாக பட்டாசு திரி பதுக்கியதாக இருவா் கைது

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே சட்ட விரோதமாக பட்டாசு திரி, கரி மருந்து பதுக்கிய இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். ஸ்ரீவில்லிபுத்தூா் காவல் உள்கோட்டம் நத்தம்பட்டி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகள... மேலும் பார்க்க

நிறை புத்தரிசி பூஜை: கேரளத்துக்கு நெல் கதிா்கள் அனுப்பி வைப்பு!

கேரள மாநிலத்தில் நடைபெறவுள்ள நிறை புத்தரிசி பூஜைக்கு விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்திலிருந்து வாகனங்கள் மூலம் 108 நெல் கதிா் கட்டுகள் அனுப்பி வைக்கப்பட்டன. கேரளத்திலுள்ள சபரிமலை ஐயப்பன் கோயில், அச்சன... மேலும் பார்க்க

ரயில் முன் பாய்ந்து இளைஞா் தற்கொலை

சாத்தூா் அருகே ரயில் முன் பாய்ந்து இளைஞா் தற்கொலை செய்து கொண்டாா். விருதுநகா் அருகே எட்டநாயக்கன்பட்டியைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் (52). இவரது மகன் நிரஞ்சன் (20). தனியாா் கல்லூரியில் ஆங்கிலம் மூன்றாம் ... மேலும் பார்க்க

பட்டாசு ஆலை வெடி விபத்து: மேலும் ஒருவா் உயிரிழப்பு

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகே கடந்த திங்கள்கிழமை நிகழ்ந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் காயமடைந்த மேலும் ஒரு பெண் தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா். திருத்தங்கல்லைச் சோ்ந்த சீனிவாசன் மகன் கோபி. இவரு... மேலும் பார்க்க

மணல் திருட்டில் ஈடுபட்டவருக்கு ஓராண்டு சிறை

சாத்தூா் அருகே மணல் திருட்டில் ஈடுபட்டவருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து சாத்தூா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது. விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள சங்கரநத்தம் பகுதியைச் சோ்ந்தவா் ... மேலும் பார்க்க

ஆடி அமாவாசை: சதுரகிரியில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் தரிசனம்

ஆடி அமாவாசையையொட்டி, சதுரகிரி மலை மீது அமைந்துள்ள சுந்தரமகாலிங்கம் கோயிலில் வியாழக்கிழமை ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகேயுள்ள சதுரகிரி சுந்த... மேலும் பார்க்க