செய்திகள் :

ஸ்ரீவில்லிபுத்தூர்: பெரிய மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்; ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!

post image

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் பழமை வாய்ந்த பெரிய மாரியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் வருடம் தோறும் பங்குனி மாதத்தில் திருவிழா வெகு சிறப்பாக நடைபெறும்.

இதில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் விரதம் இருந்து பூக்குழி இறங்கி தங்களது நேற்றிகடனைச் செலுத்துவார்கள். மேலும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் விரதம் இருந்து பெரிய மாரியம்மனைத் தரிசனம் செய்வார்கள்.

புனித நீர் தெளிக்கப்படும் காட்சி
புனித நீர் தெளிக்கப்படும் காட்சி

ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் திருக்கோயில் கும்பாபிஷேக விழா கடந்த 30ஆம் தேதி கணபதி ஹோமம் யாகசாலை வேத பாராயணங்களுடன் தொடங்கியது.

1997 ஆம் ஆண்டு இந்தத் திருக்கோயிலுக்குக் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து தற்போது சுமார் 25 ஆண்டுகளுக்குப் பின்பு கும்பாபிஷேகம் இன்று காலை 7.35 மணிக்கு நடைபெற்றது.

வேதா பாராயணங்களுடன் தீர்த்த நீர் ஊர்வலமாகக் கொண்டு வரப்பட்டு பெரிய மாரியம்மன் கருவறையில் விமான கலசத்தில் ஊற்றப்பட்டு மகா தீபாரதனை நடைபெற்றது.

யாக குண்டம்
யாக குண்டம்

அதைத்தொடர்ந்து மூலவருக்குச் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இந்தப் பெரிய மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மான்ராஜ், திருக்கோயில் செயல் அலுவலர் ஜோதிலட்சுமி முன்னிலையில் நடைபெற்றது.

இந்தக் கும்பாபிஷேக திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். கலசத்தில் ஊற்றப்பட்ட புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டன. மேலும் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானங்களும் வழங்கப்பட்டன.

பக்தர்களின் பாதுகாப்புக் கருதி சுமார் 300-க்கும் மேற்பட்ட காவல் துறையினர், தீயணைப்புத் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

பர்கூர் மலை கிராமத்தில் மகா குண்டம் திருவிழா... கடலென திரண்ட மக்கள் - Album

குண்டம் திருவிழாகுண்டம் திருவிழாகுண்டம் திருவிழாகுண்டம் திருவிழாகுண்டம் திருவிழாகுண்டம் திருவிழாகுண்டம் திருவிழாகுண்டம் திருவிழாகுண்டம் திருவிழாகுண்டம் திருவிழாகுண்டம் திருவிழாகுண்டம் திருவிழாகுண்டம் ... மேலும் பார்க்க

Guru Mithreshiva: "ஆன்மீகத்தில் 35 ஆண்டுகள்... பல குருமார்களோட பயணித்திருக்கிறேன்" - குரு மித்ரேஷிவா

குரு மித்ரேஷிவா எழுதிய பணவாசம், கருவில் இருந்து குரு வரை, உனக்குள் ஒரு ரகசியம் ஆகிய மூன்று நூல்களின் வெளியீட்டு விழா, சென்னையில் தொழிலதிபர் நல்லி குப்புசாமி தலைமையில் நடைபெற்றது. இதில் பொருளாதார நிபுண... மேலும் பார்க்க

கல்யாண வரமருளும் கங்கணப் பிராப்த பூஜை! நீங்கள் நினைத்த வரன் உடனே கிடைக்கும் அதிசயம்!

சக்தி விகடன் வாசகர்களின் குறைகள் தீரவும் வளங்கள் சேரவும் வரும் ஆடி ஏகாதசி 20.7.25 நாளில் இங்கு கங்கணப் பிராப்த சங்கல்பப் பிரார்த்தனை நடத்தப்படவுள்ளது. திருமண வரமும் குடும்ப சுபீட்சமும் அருளும் பரிகார ... மேலும் பார்க்க

ஆசியாவிலே அதிக எடை கொண்ட நெல்லையப்பர் கோயில் தேர்; சுத்தம் செய்த தீயணைப்புத்துறை | Photo Album

ஆசியாவிலே அதிக எடை கொண்ட நெல்லையப்பர் திருக்கோயில் தேரை சுத்தம் செய்த தீயணைப்புத்துறை வீரர்கள்.! ”6 முறை அறுந்த நெல்லையப்பர் தேர் வடங்கள்”- அதிகாரிகளின் அலட்சியம் காரணமா? - வேதனையில் பக்தர்கள்!Junior ... மேலும் பார்க்க

திருச்செந்தூர் கோயிலில் தமிழில் குடமுழுக்கு; `திமுக அரசின் வெற்று அறிவிப்பை ஏற்க முடியாது' - சீமான்

திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், 16 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் ஜூலை 7-ம் தேதி குடமுழுக்கு நடைபெறவுள்ளது. இந்த குடமுழுக்கினை தமிழில் நடத்திடக் கோரி பல்வேறு அமைப்புகள் கோரிக்... மேலும் பார்க்க

"கைலாசா எங்கு உள்ளது? எப்படிச் செல்வது?" - நித்யானந்தா தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள் கேள்வி

"கைலாசா எங்கு உள்ளது? அங்கு எப்படிச் செல்வது? நீங்கள் சென்று உள்ளீர்களா? பாஸ்போர்ட், விசா உள்ளிட்டவை உண்டா?" என நித்யானந்தா வழக்கில் நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.நித்யான... மேலும் பார்க்க