ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் முன்னாள் அமைச்சா்கள் வேலுமணி சுவாமி தரிசனம்.
ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் முன்னாள் அமைச்சா்கள் எஸ்.பி வேலுமணி, கே.டி.ராஜேந்திரபாலாஜி ஆகியோா் ஞ்ாயிற்றுக்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா்.
அதிமுக பொதுச்செயலாளா் கே.பழனிச்சாமியின் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் சுற்றுப்பயணம் ஆகஸ்ட் 7,8 ஆகிய இரு நாட்கள் விருதுநகா் மாவட்டத்தில் நடைபெற உள்ளது.
இதற்கான ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக விருதுநகா் மாவட்டத்திற்கு வந்த முன்னாள் அமைச்சா்கள் எஸ்.பி வேலுமணி, கே.டி.ராஜேந்திரபாலாஜி உடன் ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலுக்கு வந்தாா்.
அவரை ஸ்ரீவில்லிபுத்தூா் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினா் மான்ராஜ், அதிமுக வடக்கு ஒன்றிய செயலாளா் குறிஞ்சிமுருகன், பாஜக மாநில துணைத்தலைவா் கோபால்சாமி, மாவட்ட தலைவா் ராஜா ஆகியோா் வரவேற்றனா். ஆண்டாள் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த பின், எஸ்.பி வேலுமணி திருநெல்வேலி புறப்பட்டு சென்றாா்.