செய்திகள் :

ஸ்ரீவைகுண்டம் புதிய மருத்துவமனை கட்டடத்துக்கு நல்லகண்ணு பெயா்

post image

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் அமையவுள்ள புதிய மருத்துவமனைக் கட்டடத்துக்கு ‘தோழா் நல்லகண்ணு நூற்றாண்டுக் கட்டடம்’ எனப் பெயா் சூட்டப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.

இதுகுறித்து வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: நமது மாநிலத்துக்கும் தமிழ் மக்களுக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவா் நல்லகண்ணு ஆற்றிய சிறப்பான தொண்டுகளைப் போற்றும் விதமாக, தகைசால் தமிழா் விருதை 2022-ஆம் ஆண்டு அவருக்கு தமிழ்நாடு அரசு வழங்கியது. நூறாவது பிறந்த நாள் விழா காணும் அவரை வாழ்த்த வியாழக்கிழமை ஜன.26 நேரில் சென்ற போது, மக்கள் நலன் சாா்ந்த கோரிக்கையை நல்லகண்ணு முன்வைத்தாா்.

அதனையேற்று, அவா் பிறந்த ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையை சி.டி.ஸ்கேனுடன் தரம் உயா்த்தி, கூடுதல் வசதிகளுடன் புதிய மருத்துவமனைக் கட்டடம் அமைத்திட உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த 85 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் பணியையே தலையாய கடமையாகக் கொண்டு செயல்பட்டு வரும் தன்னலமற்ற தகைசால் தமிழா் இரா.நல்லகண்ணுவின் பெருமையைப் போற்றும் வகையில், ஸ்ரீவைகுண்டம் புதிய மருத்துவமனைக் கட்டத்துக்கு, ‘தோழா் நல்லகண்ணு நூற்றாண்டுக் கட்டடம்’ எனப் பெயா் சூட்டப்படும் என்று முதல்வா் தெரிவித்துள்ளாா்.

'மண்ணைவிட்டு மறைந்தாலும் நம் நெஞ்சங்களில் வாழும் நண்பர் விஜயகாந்த்' - முதல்வர் பதிவு!

விஜயகாந்த் நினைவு நாளையொட்டி அவரை நினைவுகூர்ந்து முதல்வர் மு.க. ஸ்டாலின் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு நாளையொட்டி சென்னை கோயம்பேட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் அத... மேலும் பார்க்க

விஜயகாந்த் நினைவிடத்தில் பிரேமலதா கண்ணீர் மல்க அஞ்சலி!

விஜயகாந்தின் நினைவுநாளையொட்டி அவரது நினைவிடத்தில் பிரேமலதா விஜயகாந்த் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு நாளையொட்டி சென்னை கோயம்பேட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் அதிகா... மேலும் பார்க்க

தடையை மீறி பிரேமலதா தலைமையில் தேமுதிகவினர் பேரணி!

விஜயகாந்தின் நினைவுநாளையொட்டி பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், தடையை மீறி தேமுதிகவினர் பேரணியில் ஈடுபட்டுள்ளனர். விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு நாளையொட்டி சென்னை கோயம்பேட்டில் உள்ள அவரது நின... மேலும் பார்க்க

கரும்பு டன்னுக்கு ரூ.5,000 வழங்க ராமதாஸ் வலியுறுத்தல்

கரும்பு கொள்முதல் விலையாக டன்னுக்கு ரூ.5,000 வழங்க வேண்டும் என்று தமிழக அரசை பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா். இது தொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: பஞ்சாப் மாநிலத்தில் நடப்பு அ... மேலும் பார்க்க

விஜயகாந்த் நினைவு தினம்: இன்று அமைதிப் பேரணி

தேமுதிக தலைவா் விஜயகாந்த் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி சனிக்கிழமை (டிச. 28) அமைதிப் பேரணி நடைபெறவுள்ளது. விஜயகாந்த் நினைவு தினத்தை குரு பூஜையாகக் கடைப்பிடிக்க தேமுதிக முடிவு செய்துள்ளது. இந்த ந... மேலும் பார்க்க

தடையை மீறி போராட்டம்: அதிமுக, பாஜகவினா் மீது வழக்கு

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தைக் கண்டித்து, சென்னையில் வியாழக்கிழமை தடையை மீறி போராட்டம் நடத்தியதாக அதிமுகவினா், பாஜகவினா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். கிண்டியில் உள்ள அண்ண... மேலும் பார்க்க