செய்திகள் :

ஸ்லோவாக்கியாவில் வேகமாக பரவும் தொற்று! எல்லைக் கட்டுப்பாடு விதித்த செக் குடியரசு!

post image

ஸ்லோவாக்கியா நாட்டில் வேகமாக பரவி வரும் கால்நடை தொற்றினால் அதன் அண்டை நாடான செக் குடியரசு எல்லைக் கட்டுப்பாடு விதித்துள்ளது.

ஸ்லோவாக்கியா நாட்டின் மூன்று பண்ணைகளிலுள்ள கால்நடைகளுக்கு கோமாரி நோய் தொற்று பரவியுள்ளது. இதனால், அதன் பக்கத்து நாடான செக் குடியரசில் எல்லைக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு அந்நாட்டை கடக்கும் நான்கு முக்கிய எல்லைப் பாதைகளின் வழியாக பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் கால்நடைகளுக்கு செக் குடியரசு அதிகாரிகள் தடை விதித்துள்ளனர்.

இதுகுறித்து செக் குடியரசின் வேளாண்மைத் துறை அமைச்சர் மாரெக் வைபோர்னி கூறுகையில், ஸ்லோவாக்கியாவுடனான எல்லையைக் கடக்கும் இடங்களில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டின் முக்கிய விவசாய சங்கங்கள் மற்றும் அதன் தலைவர்களை தொடர்புக்கொண்டு அவசரகால நடவடிக்கைகள் மற்றும் கடுமையான உயிரியல் பாதுகாப்பு நெறிமுறைகளை கடைபிடிக்குமாறு வலியுறுத்தியதாகக் கூறியுள்ளார்.

இதையும் படிக்க:முன்னாள் ஆர்ஜென்டீன அதிபர் மீது அமெரிக்கா தடை!

இந்நிலையில், இம்மாத (மார்ச்) துவக்கத்தில் கோமாரி நோய் பரவலினால் ஹங்கேரி மற்றும் ஸ்லோவாக்கியா ஆகிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கால்நடைகளுக்கு செக் குடியரசு தடை விதித்திருந்த நிலையில் அந்த தடைகள் கடந்த சில நாள்களுக்கு முன்னர் விலக்கப்பட்டது.

முன்னதாக, கோமாரி நோயானது ஆடு, மாடு, பன்றி மற்றும் செம்மறி ஆடு போன்ற கால்நடைகளை சுவாசக் காற்றின் வழியாகவும் விலங்குகளுக்கு இடையிலான நேரடி தொடர்பின் மூலமாகவும் தாக்கும் அபாயமுள்ளது.

இந்த நோய்யினால் பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு காய்ச்சல், பசியின்மை, அதிகப்படியான உமிழ்நீர் சுரப்பு, வாய் மற்றும் கால்களில் கொப்புளங்கள் ஆகிய அறிகுறிகள் உண்டாகக் கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டையும், தமிழா்களையும் ஏளனம் செய்கிறாா் நிா்மலா சீதாராமன்: கனிமொழி குற்றச்சாட்டு

சென்னை: தமிழ்நாட்டையும், தமிழா்களை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் ஏளனம் செய்வதாக நாடாளுமன்ற திமுக குழு தலைவா் கனிமொழி குற்றச்சாட்டியுள்ளாா்.இது தொடா்பாக அவா் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில்... மேலும் பார்க்க

ஜார்க்கண்ட்: கிராமவாசிகள் தாக்கியதில் 5 வனக்காவலர்கள் படுகாயம்!

ஜார்க்கண்ட் மாநிலம் பலாமூ மாவட்டத்தில் கிராமவாசிகள் தாக்கியதில் 5 வனக்காவலர்கள் படுகாயமடைந்துள்ளனர். பலாமூ மாவட்டத்தின் பன்ஸ்திஹா வனப்பகுதியில் சட்டவிரோதமாக பாறைகள் வெட்டி எடுக்கப்படுவதாக வனத்துறையினர... மேலும் பார்க்க

சசிகலா, ஓபிஎஸ், தினகரனை மீண்டும் இணைக்க வாய்ப்பே இல்லை: எடப்பாடி பழனிசாமி

அதிமுகவில் சசிகலா, ஓபிஎஸ், தினகரனை மீண்டும் இணைக்க வாய்ப்பே இல்லை என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார். சேலத்தில் அவர் செய்தியாளர்களுடான சந்திப்பில் பேசுகையில்,2025-26 நிதிநிலை... மேலும் பார்க்க

நிவின் பாலி - நயன்தாராவின் ‘டியர் ஸ்டூடண்ட்ஸ்’ படப்பிடிப்பு நிறைவு!

நடிகை நயன்தாரா மற்றும் நடிகர் நிவின் பாலி ஆகியோர் நடித்து வந்த ‘டியர் ஸ்டூடண்ட்ஸ்’ எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.இயக்குநர்கள் சந்தீப் குமார் மற்றும் ஜார்ஜ் பிலிப் ராய் ஆகியோரின் இ... மேலும் பார்க்க

சூதாட்ட நிறுவனங்கள் தான் திமுக அரசுக்கு முக்கியமா?: ராமதாஸ் கேள்வி

திருச்சி அருகே 27 வயது இளைஞர் ஆன்லைன் சூதாட்டத்தில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்ததால் ஏற்பட்ட கடன் மற்றும் மன உளைச்சல் காரணமாக வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள நிலையில், இன்னும் எத்தனை உயிர்... மேலும் பார்க்க

தென் கொரியா காட்டுத் தீ: 4 பேர் பலி...1500 பேர் வெளியேற்றம்!

தென் கொரியாவின் தென்கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள பயங்கர காட்டுத் தீயினால் 4 பேர் பலியாகியுள்ளனர். சான்சியோங் மாகாணத்தின் வனப்பகுதியில் கடந்த மார்ச் 21 அன்று ஏற்பட்ட காட்டுத் தீயானது அப்பகுதியில் வீ... மேலும் பார்க்க