செய்திகள் :

ஹமாஸுடன் போர் நிறுத்தம்: இஸ்ரேல் ஒப்புதல்

post image

ஹமாஸுடன் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்துள்ளது.

இதன் மூலம் காஸாவில் 2023இல் தொடங்கிய இஸ்ரேல்-ஹமாஸ் போர் 15 மாதத்துக்கு பின் முடிவுக்கு வருகிறது.

இந்தப் போரால் 46,000-க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டு காஸாவின் மக்கள்தொகையில் 90% பேர் இடம்பெயர்ந்து தங்கள் வாழ்வாதாரங்களைத் தொலைத்துள்ளனர்.

இஸ்ரேல்-ஹமாஸ் ஒப்பந்தம் குறித்த அறிவிப்புக்கு பின் காஸாவில் நடந்த தாக்குதலில் 113 பேர் பலியாகியுள்ளனர்.

ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் மருத்துவமனையில் அனுமதி

அமெரிக்கா, கத்தார் நாடுகளின் சமரச நடவடிக்கைகளால் இஸ்ரேல்-ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

காஸாவில் ஹமாஸ் உடனான இஸ்ரேல் போர் நிறுத்தம் ஞாயிறு முதல் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக இஸ்ரேல் - காஸா இடையே நடைபெற்று வந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஹமாஸ் அமைப்பினர் ஏற்றுக்கொண்டதற்கு இந்தியா வரவேற்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ரஷியா: நவால்னியின் வழக்குரைஞா்களுக்கு சிறைத் தண்டனை

ரஷியாவின் மறைந்த முன்னாள் முக்கிய எதிா்க்கட்சித் தலைவா் அலெக்ஸி நவால்னிக்காக வாதாடிய மூன்று வழக்குரைஞா்களுக்கு அந்த நாட்டு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை சிறைத் தண்டனை விதித்தது. வாடிம் கோப்ஸெவ், இகாா் சொ்... மேலும் பார்க்க

அடுத்த 2 ஆண்டுகளுக்கு இந்திய பொருளாதார வளா்ச்சி 6.7%-ஆக இருக்கும்: உலக வங்கி

அடுத்த 2 ஆண்டுகளுக்கு இந்திய பொருளாதாரம் 6.7 சதவீத வளா்ச்சியில் தொடரும் என உலக வங்கி தெரிவித்ததது. வருகின்ற ஏப்ரல் மாதம் தொடங்கவுள்ள நிதியாண்டில் இருந்து இந்த வளா்ச்சியை எதிா்பாா்க்கலாம் என தெற்கு ஆசி... மேலும் பார்க்க

ஒரே நாளில் 2,500 பேருக்கு பைடன் பொதுமன்னிப்பு

அமெரிக்க அதிபா் ஜோ பைடனின் பதவிக் காலம் இன்னும் இரு நாள்களில் முடிவடையும் நிலையில், சாதாரண போதைப் பொருள் குற்றங்களுக்காக சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட சுமாா் 2,500 பேருக்கு தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன... மேலும் பார்க்க

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 14 ஆண்டுகள் சிறை!

ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 14 ஆண்டுகளும் அவரது மனைவிக்கு 7 ஆண்டுகளும் சிறைத் தண்டனை வழங்கி அந்நாட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. அல்-காதிர் அறக்கட்டளை சார்பில் 1... மேலும் பார்க்க

வெடித்துச் சிதறிய எலானின் ராக்கெட்! பதறாத எலான்!

எலான் மஸ்க்கின் விண்கலச் சோதனையில் ஸ்டார்ஷிப் ராக்கெட் வெடித்துச் சிதறியது.டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம், தனது ஸ்டார்ஷிப் ராக்கெட் மூலம் விண்கலன்களை அனுப்பி சோதனை செய்து வருகிறத... மேலும் பார்க்க

பிரபல ஹாலிவுட் இயக்குநர் டேவிட் லின்ச் காலமானார்!

புகழ்பெற்ற ஹாலிவுட் இயக்குநர் டேவிட் லின்ச் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸில் காலமானார். அவருக்கு வயது 78.ஹாலிவுட்டில் புகழ்பெற்ற திரைப்படங்களான புளூ வெல்வெட், முல்ஹோலண்ட் டிரைவ் மற்றும் தொலைக்காட்சி தொடர... மேலும் பார்க்க