செய்திகள் :

`ஹமாஸ் மறுத்தால் நெதன்யாகு என்ன செய்தாலும் முழு ஆதரவு' - டிரம்ப் பேச்சு; நெதன்யாகு புகழாரம்

post image

நேற்று அமெரிக்க வெள்ளை மாளிகையில் ட்ரம்ப் - நெதன்யாகு சந்திப்பு நடந்தது.

கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளை நெருங்கும் இஸ்ரேல் - காசா போர் நிறுத்தத்திற்கு ஒப்புகொண்டுள்ளார் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு. இதற்காக அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் 20 பரிந்துரைகளை ஒப்புகொண்டுள்ளார் அவர்.

தனிப்பட்ட சந்திப்பிற்கு பிறகு, இருவரும் ஒன்றாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது ட்ரம்ப் பேசியதாவது:

"ஆயிரம் ஆண்டுகளில் முதன்முறையாக, நீங்கள் வரலாற்றைப் பார்த்தாலும், நீங்கள் படித்திருந்தாலும், நீங்களும் ஆயிரம் ஆண்டுகளில் முதல்முறையாக என்று கூறுவீர்கள்.

ஹமாஸின் அச்சுறுத்தலை நீக்குவதற்கான இஸ்ரேலின் பணிக்கு எப்போதுமே என்னுடைய முழு ஆதரவு உண்டு. ஆனால், இப்போது அமைதி ஒப்பந்தம் ஏற்படும் என்று நினைக்கிறேன்.

ட்ரம்ப் - நெதன்யாகு
ட்ரம்ப் - நெதன்யாகு

ஹமாஸ் இந்த ஒப்பந்தத்தை மறுத்தால், அதற்கு நிறைய சாத்தியங்கள் உள்ளன. அவர்கள் மட்டும்தான் இந்த ஒப்பந்தத்தை இன்னும் ஒப்புக்கொள்ளவில்லை. மற்ற அனைவருமே ஒப்புக்கொண்டு விட்டார்கள்.

ஹமாஸிடம் இருந்து பாசிட்டிவாக பதில் வரும் என்று நான் நம்புகிறேன். ஒருவேளை அப்படி வரவில்லை என்றால், நெதன்யாகு என்ன செய்தாலும், அதற்கு என்னுடைய முழு ஆதரவு உண்டு.

இஸ்ரேல் - ஹமாஸ் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு சவுதி அரேபியா, கத்தார், துருக்கி, ஜோர்டான், இந்தோனேசியா, எகிப்து, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் உதவின" என்று கூறினார்.

நெதன்யாகு பேசும்போது,

"அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு நன்றி. வெள்ளை மாளிகையில் இதுவரை இருந்தவர்களிலேயே இஸ்ரேலுக்கு சிறந்த நண்பர் ட்ரம்ப் தான்.

நெதன்யாகு
நெதன்யாகு

அவருக்கு பக்கத்தில் யாருமே வர முடியாது. அடுத்த 72 மணி நேரத்தில், உயிரோடு உள்ள மற்றும் இறந்த பணயக் கைதிகளை ஹமாஸ் ஒப்படைக்க வேண்டும்.

இதை அமைதியாக முடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இதை ஹமாஸ் மறுத்தாலோ, ஒப்புக்கொண்டுவிட்டு பின்பற்றவில்லை என்றாலோ, நாங்கள் அவர்களது பணியை முடிப்போம்.

அது எளிதாக இருந்தாலும், கடினமாக இருந்தாலும், அதை செய்து முடிப்போம்" என்று பேசியுள்ளார்.

கரூர்: "பாஜக தன் அரசியல் விளையாட்டைத் தொடங்கிவிட்டது'- ஹேமா மாலினி தலைமையிலான குழு குறித்து திருமா

கரூர் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள பா.ஜ.க-வின் தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா உத்தரவின் பேரில், எம்.பி ஹேமா மாலினி தலைமையிலான 8 பேர் கொண்ட குழு தமிழகம் வந்திருக்கிறது. இந்த நிலையில், பா.ஜ.க தன் அரச... மேலும் பார்க்க

``விஜய்க்கு இயற்கையாகவே கூட்டம் கூடுகிறது, அதனால்'' - துரைவைகோ சொன்ன அறிவுரை

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் ம.தி.மு.க முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்.பி., செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “கரூரில் மிகத் துயரமான சம்பவம் நடந்துள்ளது. இதில் அனைவருடைய தவற... மேலும் பார்க்க

Israel: கத்தார் பிரதமரிடம் மன்னிப்புக் கேட்ட நெதன்யாகு - வெள்ளை மாளிகையில் என்ன நடந்தது?

இஸ்ரேல் - காசா இடையே ஏற்பட்ட போரில் இதுவரை 66,000-க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். இதை சர்வதேச நாடுகள் இனப்படுகொலை எனக் கடுமையாகச் சாடியிருக்கின்றன. அதே நேரம், இஸ்ரேல் - ஹமாஸ் இடையே கத்... மேலும் பார்க்க

கரூர் மரணங்கள்: ``ஆறுதல் கூட சொல்லாமல் ஒரு தலைவர் செல்வது இதுவரை பார்த்திராத ஒன்று" - கனிமொழி

கரூரில் த.வெ.க தலைவர் விஜய் பங்கேற்ற கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தி இருக்கிறது. பல்வேறு அரசியல் தலைவர்கள் கரூர் சென்று பாதிக்கப்பட்ட குடு... மேலும் பார்க்க

கரூர் சம்பவம்: ``அனைவரையும் பார்த்து ஆய்வு செய்யும் வரை'' - விசாரிக்க வந்த எம்.பி குழு சொல்வதென்ன?

கடந்த சனிக்கிழமை (செப்டம்பர் 27), கரூரில் பரப்புரை மேற்கொண்டார் தவெக தலைவர் விஜய். அப்போது அங்கே கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. அதில் சிக்கி பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 41 பே... மேலும் பார்க்க

காசா விவகாரம்: ``அமைதியை நிலைநாட்ட ட்ரம்பின் முயற்சியை ஆதரிப்போம்'' - பிரதமர் மோடி புகழாரம்

ட்ரம்ப் பரிந்துரைத்த போர் நிறுத்தம் இஸ்ரேல் - பாலஸ்தீனப் போர் தொடங்கி கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்திருக்கிறது. இஸ்ரேலின் தாக்குதலால் பாலஸ்தீனத்தில் 66,000-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருக்க... மேலும் பார்க்க