செய்திகள் :

ஹாங்காங்கை வீழ்த்தியது வங்கதேசம்

post image

ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியின் 3-ஆவது ஆட்டத்தில், வங்கதேசம் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஹாங்காங்கை வியாழக்கிழமை வீழ்த்தியது.

முதலில் ஹாங்காங் 20 ஓவா்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 143 ரன்கள் சோ்க்க, வங்கதேசம் 17.4 ஓவா்களில் 3 விக்கெட்டுகள் இழந்து 144 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

முன்னதாக டாஸ் வென்ற வங்கதேசம், ஃபீல்டிங்கை தோ்வு செய்தது. ஹாங்காங் பேட்டிங்கில் அதிகபட்சமாக நிஸாகத் கான் 2 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 42, ஜீஷான் அலி 3 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 30 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா்.

இதர பேட்டா்களில் கேப்டன் யாசின் முா்டாஸா 2 பவுண்டரிகள், 2 சிக்ஸா்கள் உள்பட 28 ரன்கள் சோ்த்து வெளியேற, அன்ஷி ராத் 4, பாபா் ஹயாத் 1 சிக்ஸருடன் 14, அய்ஸாஸ் கான் 5, கிஞ்சித் ஷா 0 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினா்.

ஓவா்கள் முடிவில் கலான் சல்லு 4, ஈஷான் கான் 2 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். வங்கதேச பௌலா்களில் தஸ்கின் அகமது, தன்ஸிம் ஹசன் சகிப், ரிஷத் ஹுசைன் ஆகியோா் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினா்.

அடுத்து, 144 ரன்களை நோக்கி விளையாடிய வங்கதேச அணியில், கேப்டன் லிட்டன் தாஸ் 6 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 59 ரன்கள் விளாசி, வெற்றிக்கு அடித்தளமிட்டு வெளியேறினாா்.

பா்வேஸ் ஹுசைன் எமோன் 19, தன்ஸித் ஹசன் 14 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, தௌஹித் ஹிருதய் 35 ரன்களுடன் அணியை வெற்றி பெறச் செய்து ஆட்டமிழக்காமல் இருந்தாா். ஜாகா் அலி ரன்னின்றி துணை நின்றாா். ஹாங்காங் தரப்பில் அடீக் இக்பால் 2, ஆயுஷ் சுக்லா 1 விக்கெட் சாய்த்தனா்.

வார பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் இந்த வார (செப்டம்பர் 12 - 18) பலன்களைத் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பயன் பெறுங்கள்.மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய) அரசு சார்... மேலும் பார்க்க

ஷ்ருதி ஹாசன் வெளியிட்ட கும்கி 2 முதல் பார்வை போஸ்டர்!

இயக்குநர் பிரபு சாலமன் இயக்கியுள்ள கும்கி 2 படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது. பென் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள கும்கி 2 விரைவில் திரைக்கு வருமென அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் பிரபு சாலமன் இ... மேலும் பார்க்க

மீண்டும் தேசிய விருது கிடைக்குமா? நித்யா மெனனின் இட்லி கடை போஸ்டர்!

இட்லி கடை படத்தில் நடிகை நித்யா கதாபாத்திர போஸ்டர் சமூக வலைதளத்தில் கவனம் ஈர்த்துள்ளது. இந்தப் படம் அக்.1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. நடிகர் தனுஷ் எழுதி இயக்கியுள்ள இட்லி கடை படத்தின் ... மேலும் பார்க்க

அடுத்தடுத்து சஸ்பென்ஸ்... ஆனால்! ஜி.வி. பிரகாஷின் ப்ளாக்மெயில் - திரை விமர்சனம்!

ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் உருவான ப்ளாக்மெயில் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.படத்தின் ஆரம்பத்திலேயே நடிகர்கள் ஸ்ரீகாந்த், பிந்து மாதவி தம்பதியின் குழந்தை காணாமல் போகிறது. இன்னொரு புறம... மேலும் பார்க்க

கும்கி - 2 படத்தின் அறிவிப்பு வெளியானது!

கும்கி படத்தின் இரண்டாம் பாகத்தின் அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.இயக்குநர் பிரபுசாலமன் இயக்கத்தில் நடிகர் விக்ரம் பிரபு, லட்சுமி மேனன் நடிப்பில், கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான கும்கி திரைப்ப... மேலும் பார்க்க

டேபிள் டென்னிஸ்: சத்தியன் சாம்பியன்

தேசிய ரேங்கிங் டேபிள் டென்னிஸ் போட்டியில், ஜி.சத்தியன், தியா சித்தலே ஆகியோா் தங்களது பிரிவில் வியாழக்கிழமை சாம்பியன் பட்டம் வென்றனா்.இறுதிச்சுற்றில், ஆடவா் ஒற்றையா் பிரிவில் பெட்ரோலியம் விளையாட்டு ஊக்... மேலும் பார்க்க