ஒபாமா - மிச்சல் விவாகரத்தா? ஒன்றாகத் தோன்றி உறுதி செய்த தம்பதி!
ஹாரி பாட்டர் நடிகைக்கு வாகனம் ஓட்ட தடை!
ஹாரி பாட்டர் திரைப்படங்கள் மூலம் உலகளவில் பிரபலமடைந்த ஹாலிவுட் நடிகை எம்மா வாட்ஸனுக்கு, 6 மாதங்களுக்கு வாகனம் ஓட்ட தற்காலிகமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஹாலிவுட் நடிகை எம்மா வாட்ஸன், கடந்த 2024 ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டிலுள்ள ஆக்ஸ்ஃபோர்ட் நகரத்தில், 48 கி.மீ. வேகத்தில் செல்ல வேண்டிய சாலையில், 60 கி.மீ. வேகத்தில் வாகனத்தை ஓட்டியதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து, சி.சி.டி.வியில் பதிவு செய்யப்பட்ட காட்சிகளின் மூலம் அவர் மீது குற்றம்சுமத்தப்பட்ட நிலையில், தற்போது 6 மாதங்களுக்கு அவர் வாகனம் ஓட்டுவதற்குத் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, உலகப் புகழ்பெற்ற ஹாரி பாட்டர் திரைப்படங்களில் வரும் ஹெர்மாயினி கிரேஞ்சர் எனும் கதாபாத்திரத்தில் நடித்த எம்மா வாட்ஸன் சர்வதேச அளவில் மிகவும் பிரபலமானார்.
கடந்த சில ஆண்டுகளாக, திரையுலகில் இருந்து விலகிய அவர், தற்போது ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் படிப்பு பயின்று வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: விறுவிறுப்பான சூர்யா - 46 படப்பிடிப்பு!