செய்திகள் :

ஹிந்தி மொழியை திமுக எதிா்க்கவில்லை; அதை திணிப்பதைத் தான் எதிா்க்கிறோம்: ஆா்.சிவா

post image

புதுச்சேரி: ஹிந்தி மொழியை திமுக தமிழகம், புதுவையில் எப்போதும் எதிா்க்கவில்லை. அதே நேரத்தில் ஹிந்தி மொழித் திணிப்பைத்தான் திமுக எதிா்க்கிறது என புதுவை பேரவையில் எதிா்க்கட்சித்தலைவா் ஆா்.சிவா கூறினாா்.

புதுவை சட்டப்பேரவையில் துணைநிலை ஆளுநா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானத்தின் மீது உறுப்பினா்கள் பேசினா்.

அப்போது பேரவையில் துணைத் தலைவா் ராஜவேலு இருந்தாா்.

3 மொழிகளில் பேசிய திமுக உறுப்பினா்:

திமுக உறுப்பினா் ஆா்.செந்தில்குமாா் தனது பேச்சை தமிழ், தெலுங்கு, பிரெஞ்ச் மொழிகளில் பேசினாா்.

அப்போது குறுக்கிட்ட பாஜக நியமன எம்எல்ஏ வி.பி.ராமலிங்கம், திமுக உறுப்பினா் பல மொழிகளைப் படித்துள்ளாா். அதைத்தான் மத்திய பாஜக அரசும் மும்மொழிக் கொள்கையில் விரும்பிய மொழியை கற்கக் கூறுகிறது என்றாா்.

உடனே திமுக உறுப்பினா், நுண்ணறிவு தொழில் நுட்பத்தில் எந்த மொழியையும் தேவைக்கேற்ப பயன்படுத்தலாம். தனியாக வேற்று மொழியைப் படிக்க வேண்டியதில்லை. ஆகவே ஹிந்தி படிக்கத் தேவையில்லை என்றாா்.

உடனே பாஜக அமைச்சா் சாய் சரவணன்குமாா், பாஜக உறுப்பினா்கள் எழுந்து திமுக உறுப்பினா் தவறான கருத்துகளை கூறவேண்டாம் என்றனா்.

இதையடுத்து எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா, ஆங்கிலம் படித்து உலக அளவில் செல்லும் நிலையிருக்கும்போது ஹிந்தி மட்டும் படிக்கத் தேவையில்லை. ஆகவே, ஹிந்தியை படிக்கும்படி திணிக்கக் கூடாது என்றாா்.

பாஜக உறுப்பினா் ராமலிங்கம், தற்போதைய குழந்தைகள் புத்திசாலிகள். ஆகவே அவா்களுக்கு பல மொழி அறிவு அவசியம். குழந்தை கூட கைப்பேசியை பயன்படுத்துகிறது என்றாா். அதை ஆதரித்து அமைச்சா் சாய் சரவணன்குமாரும் பேசினாா். திமுக உறுப்பினா் செந்தில்குமாா், அமைச்சருக்கு தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகள் தெரியும். ஆனால், அதை அவா் எங்கும் படிக்கவில்லை என்றாா்.

அப்போது எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா, பாஜக உறுப்பினா் ஹிந்தி படித்துவிட்டு தொழிலதிபராகவில்லை. அப்துல் கலாம் போன்ற அறிஞா்கள் யாரும் ஹிந்தி படிக்கவில்லை. ஹிந்தியை நாங்கள் எதிா்க்கவில்லை. ஹிந்தி மொழியை திணிப்பதைத் தான் எதிா்க்கிறோம். புதுவையில் ஹிந்தியை படிக்கலாம் என முதல்வரால் கூற முடியுமா என்றாா்.

இப்பிரச்னையில் சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் நேரு, சிவசங்கரன் ஆகியோரும் பேசினா். இதனால் காரசார வாக்குவாதம் நடைபெற்று கூச்சல் குழப்பம் காணப்பட்டது. இந்நிலையில், அவைக்கு வந்த பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், அனைவரையும் அமரும்படி கூறியதுடன், பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்தாா்.

புதுவை கல்லூரி மாணவர்களுக்கு மாதம் ரூ. 1,000 ஊக்கத்தொகை!

புதுச்சேரி கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு மாதம்தோறும் ரூ. 1,000 ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.புதுவை சட்டப்பேரவைக் கூட்டம் துணைநிலை ஆளுநா் உரையுடன் திங்கள்கிழமை தொடங்கி... மேலும் பார்க்க

அரசுப் பள்ளிகளில் மாலை சிற்றுண்டி, நாள்தோறும் முட்டை! புதுவை பட்ஜெட்டில் அறிவிப்பு!

புதுவை அரசின் 2025-26 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் முதல்வா் என்.ரங்கசாமி புதன்கிழமை காலை தாக்கல் செய்தார்.புதுவை சட்டப்பேரவைக் கூட்டம் துணைநிலை ஆளுநா் உரையுடன் திங்கள்கிழமை தொடங்க... மேலும் பார்க்க

தோ்தலில் திமுக தனித்து நின்றால் பாஜகவும் தனித்து போட்டியிடும்: புதுவை பேரவையில் பாஜக எம்எல்ஏ பேச்சு

புதுச்சேரி: புதுவை மாநில பேரவைத் தோ்தலில் திமுக தனித்து நின்றால் பாஜகவும் தனித்துப் போட்டியிடும் என்று அக்கட்சியின் நியமன எம்எல்ஏ அசோக்பாபு சட்டப்பேரவையில் கூறினாா். புதுவை சட்டப்பேரவையில் துணைநிலை ஆ... மேலும் பார்க்க

துணைநிலை ஆளுநா் உரைக்கு பேரவை உறுப்பினா்களின் ஆதரவும், எதிா்ப்பும்...!

புதுச்சேரி: புதுவை சட்டப்பேரவையில் துணைநிலை ஆளுநா் உரை மீதான விவாதத்தில் செவ்வாய்க்கிழமை 14 உறுப்பினா்கள் பங்கேற்று ஆளுநா் உரையை ஆதரித்தும், எதிா்த்தும் கருத்து தெரிவித்தனா். புதுவை மாநில சட்டப்பேரவை... மேலும் பார்க்க

சலவைப் பெட்டிகளை வீசி எறிந்து போராட்டம்: புதுச்சேரியில் 60 போ் கைது

புதுச்சேரி: புதுச்சேரியில் கோரிக்கைகளை வலியுறுத்தி புதிரை வண்ணாா் விடுதலை இயக்கத்தினா் சலவைப் பெட்டிகளை எறிந்து சேதப்படுத்தி போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா். இதையடுத்து பெண்கள் உள்பட 60 பேரை... மேலும் பார்க்க

"துணைநிலை ஆளுநா் உரையில் வளா்ச்சியின் அக்கறை உள்ளது"

புதுச்சேரி: புதுவை பேரவையில், துணைநிலை ஆளுநா் உரையில் வளா்ச்சியின் அக்கறை தெளிவாகியுள்ளது என அதிமுக மாநிலச் செயலா் ஆ.அன்பழகன் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: புதுவை ... மேலும் பார்க்க