பயங்கரவாதிகள் முகாம்கள் மீது இந்திய ராணுவம் திடீர் தாக்குதல்!
ஹிந்துக்களின் பாதுகாப்பை மமதா உறுதி செய்யவில்லை: பாஜக
மேற்கு வங்கத்தில் முதல்வர் மமதா பானர்ஜி ஆட்சியில் ஹிந்துக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படவில்லை என பாஜக விமர்சித்துள்ளது.
மூர்ஷிதாபாத் பகுதியில் உண்மையாக பாதிக்கப்பட்ட மக்களின் வீடுகளைச் சென்று அவர் பார்வையிடவில்லை என்றும், அப்பகுதியில் இருந்து ஹிந்துக்களை அகற்றும் பணிகளில் மட்டுமே ஈடுபட்டதாகவும் குற்றம் சாட்டினார்.
மேற்கு வங்க மாநில பாஜக தலைவர் சுவேந்து அதிகாரி, ஹிந்துக்கள் பாதுகாப்பு குறித்து செய்தியாளர்களுடன் பேசியதாவது,
''மூர்ஷிதாபாத் கலவரத்தில் பாதிக்கப்பட்ட, திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சிலருக்கு மட்டும் இழப்பீடு வழங்கப்பட்டது. ஆனால், அந்தக் கலவரத்தில் உண்மையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்னும் இழப்பீடு வழங்கவில்லை.
மேற்கு வங்கத்தில் சிறுபான்மையினர் அதிகளவில் வசிக்கும் மூர்ஷிதாபாத், துலியான், சம்ஷெர்காஞ்ச், ஜங்கிபூர் ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட கலவரத்தில் 900 பேர் தாக்குதலுக்குள்ளானார்கள்.
அப்பகுதியில் உள்ள குறிப்பிட்ட மக்களை வெளியேற்றுவதற்காக நடத்தப்பட்ட இந்தக் கல்வரம், நன்கு திட்டமிடப்பட்ட ஒன்று. மாவட்டத்தில் ஹிந்து மக்களே இல்லாத நிலையை ஏற்படுத்தும் திட்டமிட்ட விளையாட்டின் ஒரு பகுதியே மூர்ஷிதாபாத் கலவரம்.
கலவரத்தில் பாதிக்கப்பட்ட 900 பேரின் வீடுகளுக்குச் சென்று இன்னும் முதல்வர் பார்வையிடவில்லை. அவருக்கு அப்பகுதிக்குச் செல்ல துணிவு இல்லை. அங்கு மமதாவுக்கு எதிராக கருப்புக் கொடி காட்டி மக்கள் எதிர்ப்புகளைத் தெரிவிக்கின்றனர்.
கலவரத்தில் பாதிக்கப்பட்டதாக 250 குடும்பங்களுக்கு இழப்பீட்டுத் தொகைக்கான காசோலைகள் வழங்கப்பட்டுள்ளன. இதில், 40 பேர் போலியானவர்கள். கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் அல்ல. அவர்கள் அனைவரும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள்.
முதல்வரின் தவறான நடவடிக்கையாலும், நாடகத்தாலும் பாதிக்கப்பட்ட மக்கள், கடந்த 14 ஆண்டுகளில் முதல்முறையாக மமதாவை நிராகரித்துள்ளனர்'' எனக் குறிப்பிட்டார்.
இதையும் படிக்க | பஹல்காம் தாக்குதல் முன்கூட்டியே தெரியுமா? பொறுப்பின்றி பேசுகிறார் கார்கே - பாஜக