செய்திகள் :

ஹிமாசல் கனமழை: யாத்திரை சென்ற 10 பேர் பலி! 6,000 பக்தர்கள் மீட்பு!

post image

ஹிமாசலப் பிரதேசத்தில் பெய்து வரும் கனமழையால், மணிமகேஷ் யாத்திரை சென்ற 10 பக்தர்கள் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பா மாவட்டத்தில், ஆண்டுதோறும் நடைபெறும் மணிமகேஷ் புனித யாத்திரையை மேற்கொள்ள ஆயிரக்கணக்கான பக்தர்கள் அங்கு திரண்டிருந்தனர். இந்நிலையில், மோசமான வானிலை, கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவு போன்ற நிகழ்வுகளினால் அந்த மலையேறும் யாத்திரை கடுமையாகப் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து பேசிய அம்மாநில பேரிடர் மேலாண்மைத் துறை செயலாளார் டிசி ராணா, மணிமகேஷ் யாத்திரை மேற்கொண்டவர்களில் குறைந்தது 10 பக்தர்கள் பலியானதாகவும், 7 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து அவர் பேசியதாவது:

“தொடர்ந்து பெய்த கனமழை மற்றும் நிலச்சரிவால், யாத்திரை மேற்கொள்ளப்படும் சம்பா மற்றும் பார்மோர் சாலை முடக்கப்பட்டது. இதனால், பக்தர்கள் அனைவரும் மலைப் பாதைகளில் சிக்கியுள்ளனர். வானிலை சீரானவுடன், மாநில, தேசிய பேரிடர் மீட்புப் படைகள் மற்றும் மலையேறும் மீட்புக் குழுக்கள் அவர்களை மீட்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். தற்போது வரை அங்கிருந்து சுமார் 6000 பக்தர்கள் மீட்கப்பட்டு சம்பாவுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்” எனக் கூறியுள்ளார்.

இத்துடன், உடல் நலம் பாதிக்கப்பட்ட பக்தர்கள் அனைவரும் ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கப்பட்டு சம்பா மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பா மற்றும் பதான்கோட் இடையிலான நெடுஞ்சாலையில் தற்போது போக்குவரத்து சரிசெய்யப்பட்டுள்ளது. இருப்பினும், சம்பா - பார்மோர் பாதையின் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

முன்னதாக, ஹிமாசலப் பிரதேசத்தில் தற்போது வரை கனமழை சார்ந்த சம்பவங்களினால் 164 பேர் பலியானதுடன், 40 பேர் மாயமாகியுள்ளனர்.

மணிமகேஷ் யாத்திரை மேற்கொண்டு பலியான பக்தர்களில் பெரும்பாலானோர் ஆக்சிஜன் பற்றாக்குறை மற்றும் ஹைபோதெர்மியா ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: உ.பி.: மது அருந்திய 2 பேர் பலி, ஒருவர் கவலைக்கிடம்!

It has been reported that 10 devotees who went on the Manimahesh Yatra have died due to heavy rains in Himachal Pradesh.

கேரளத்தில் பிரபல யூடியூபர் மீது தாக்குதல்

கேரளத்தில் பிரபல யூடியூபர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம், தொடுபுழாவில் பிரபல யூடியூபர் ஷாஜன் ஸ்காரியா நேற்று மாலை அடையாளம் தெரியாத கும்பலால் தாக்கப்பட்டுள... மேலும் பார்க்க

சீனாவில் ட்ரோன் விளக்குகளால் வரவேற்கப்பட்டாரா மோடி? உண்மை என்ன?

சீனாவில் பிரதமர் நரேந்திர மோடிக்கு ட்ரோன் விளக்குகளால் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டதாக பரவும் புகைப்படங்கள் குறித்து உண்மைத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவை, பாஜகவினரால் திட்டமிட்டு உருவாக்கப்பட்டு பகிரப... மேலும் பார்க்க

பிகாரில் அனைத்து வாக்காளர்களுக்கும் புதிய வாக்காளர் அடையாள அட்டைகள் !

பிகாரில் வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தப் பணிக்குப் பிறகு அனைத்து வாக்காளர்களுக்கும் புதிய வாக்காளர் அடையாள அட்டைகளை வழங்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.இர... மேலும் பார்க்க

மணிப்பூரில் பத்திரிகையாளர் மீது துப்பாக்கிச்சூடு

மணிப்பூரில் மலர் விழாவை செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர் துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மணிப்பூரின் சேனாபதி மாவட்டத்தில் மலர் விழாவை நாகாலாந்தை தளமாகக் கொண்ட தொலைக்... மேலும் பார்க்க

நடிகரின் பாதுகாவலருக்கு மாதம் ரூ.15 லட்சம் சம்பளம்! ரூ.100 கோடி சொத்து?

பாலிவுட் நடிகர் சல்மான் கானின் பாதுகாவலருக்கு சம்பளமாக ரூ.15 லட்சம் வழங்கப்படுவதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகின்றன.பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு நீண்டகாலமாகவே அச்சுறுத்தல்கள் இருந்து வருகின்ற... மேலும் பார்க்க

நடனமாடி ஓணம் கொண்டாடிய தில்லி முதல்வர் ரேகா குப்தா!

தில்லி முதல்வர் அலுவலகத்தில் நடைபெற்ற ஓணம் கொண்டாட்டத்தில், முதல்வர் ரேகா குப்தா கலந்துகொண்டு சக பெண்களுடன் நடனமாடிய விடியோ பலரால் பகிரப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டு வருக... மேலும் பார்க்க