செய்திகள் :

ஹிமாசல் மேகவெடிப்பு: கனமழை, வெள்ளத்தால் ஒருவர் பலி! 12 பேர் மாயம்!

post image

ஹிமாசல பிரதேசத்தில், மேகவெடிப்பால் பெய்த கனமழையால் வெள்ளம் ஏற்பட்டதில் ஒருவர் பலியானதுடன், 12 பேர் மாயமானதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மண்டி மாவட்டத்தில் நேற்று (ஜூன் 30) மாலை முதல் சுமார் 216.8 மி.மீ. அளவிலான மழை பெய்திருப்பது பதிவாகியுள்ளது. இதையடுத்து, அம்மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால், கர்சோக் பகுதியில் ஒருவர் பலியாகியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, சுமார் 12-13 பேர் இந்த வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதில், சையாஞ்சு பகுதியில் வசித்த 2 குடும்பங்களைச் சேர்ந்த 7 பேர் மாயமானதாகத் தெரியவந்துள்ளது.

தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், அம்மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ள நிலையில், அங்குள்ள மக்கள் ஏராளமானோர் தங்களது வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், மண்டி மாவட்டத்தின் ஏராளமான கால்நடைகள், வாகனங்கள் ஆகியவை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதுடன், அங்குள்ள பல கிராமங்களின் வீடுகள் மற்றும் சாலைகள் பலத்த சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இத்துடன், மாவட்டத்தின் அனைத்து ஆறுகள் மற்றும் நீர்நிலைகள் நிரம்பியுள்ளன. மேலும், பண்டோஹ் அணையின் நீர்மட்டம் 2,922 அடிக்கு உயர்ந்துள்ளதால், அணையிலிருந்து பியேஸ் ஆற்றுக்கு நீர் வெளியேற்றப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள மண்டி மற்றும் ஹமிர்பூர் மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளிகளுக்கும், இன்று (ஜூலை 1) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹிமாசல பிரதேசத்தின் சம்பா, ஹமிர்பூர், மண்டி, ஷிம்லா, சிர்மவூர் மற்றும் சோலன் ஆகிய மாவட்டங்களுக்கு, வானிலை ஆயுவு மையம் அடுத்த 24 மணிநேரத்துக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

SUMMARY

Himachal cloudburst: One dead, 12 missing due to heavy rain and flooding!

இதையும் படிக்க: மணிப்பூரில் தொடரும் கைதுகள்..ஆயுதங்கள் பறிமுதல்! எல்லையில் உலகப் போர் குண்டு?

தொழில்நுட்பத்தை ஜனநாயகப்படுத்தியது டிஜிட்டல் இந்தியா திட்டம்: அமித் ஷா

தொழில்நுட்பத்தை அனைவரும் பயன்படுத்தும் வகையில் ஜனநாயகப்படுத்தியது டிஜிட்டல் இந்தியா திட்டம் என மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். ஒருங்கிணைந்த டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை ஊக்குவிக்கும... மேலும் பார்க்க

ஆம் ஆத்மி எம்.பி.யின் ராஜிநாமா ஏற்பு!

ஆம் ஆத்மி மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சீவ் அரோராவின் ராஜிநாமாவை மாநிலங்களவைத் தலைவரும் குடியரசுத் துணைத் தலைவருமான ஜகதீப் தன்கர் ஏற்றுக்கொண்டார்.பஞ்சாப் மாநிலத்தின் மாநிலங்களவை உறுப்பினராக இருந்த சஞ்சீவ... மேலும் பார்க்க

கார்ப்பரேட்டின் மிருகத்தனமான கருவி ஜிஎஸ்டி: ராகுல் காந்தி!

ஜிஎஸ்டி என்பது பொருளாதார அநீதி மற்றும் கார்ப்பரேட்டின் மிருகத்தனமான கருவி என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அறிமுகம் செய்யப்பட்டு இன... மேலும் பார்க்க

சித்தராமையாவே முதல்வராக தொடருவார்! -டி.கே.சிவகுமார் திட்டவட்டம்

பெங்களூரு: ‘கர்நாடக முதல்வராக சித்தராமையாவே தொடருவார்’ என்று அம்மாநில துணை முதல்வர் டி. கே. சிவகுமார் இன்று(ஜூலை 1) செய்தியாளர்களுடன் பேசுகையில் தெரிவித்தார்.கர்நாடக முதல்வராக சித்தராமையா பதவியேற்று இ... மேலும் பார்க்க

கடற்படையில் இணைந்த போர்க் கப்பல் ஐஎன்எஸ் தமால்!

இந்திய கடற்படைக்காக ரஷியாவில் தயாரிக்கப்பட்ட ஏவுகணை தாங்கிய போா்க்கப்பல் ‘ஐஎன்எஸ் தமால்’ இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.ரஷியாவின் கடலோர நகரமான கலினின்கிராடில் இருநாட்டு கடற்படை அதிகாரிகள் முறையா... மேலும் பார்க்க

மின்தடையால் பாதிக்கப்பட்ட 75 மாணவர்களுக்கு இளநிலை நீட் மறு தேர்வு: உயர்நீதிமன்றம் உத்தரவு!

இளநிலை நீட் மறு தேர்வு எழுதிய குறிப்பிட்ட சில மாணவர்களுக்கு மட்டும் மறு தேர்வு நடத்த மத்திய பிரதேச உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் அந்த மாணவர்களுக்கு நீட் மறு தேர்வு நடத்தப்பட உள்ளது.இதனையடுத்து, நா... மேலும் பார்க்க