பெங்களூரு வேலையைத் துறந்து, விவசாயத்தில் ரூ. 2.5 கோடி ஈட்டும் பிகார் இளைஞர்!
ஹிருத்திக் ரோஷனிடம் அதிகம் கற்றுக்கொண்டேன்: ஜூனியர் என்டிஆர்
வார் - 2 படத்தில் ஜூனியர் என்டிஆர், ஹிருத்திக் ரோஷன் ஆகியோரின் படப்பிடிப்பு முடிவடைந்தது. 150 நாள்களாக இந்தப் படத்தின் படப்பிடிப்பு 5 நாடுகளில் நடைபெற்றன.
யஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பில் இயக்குநர் அயன் முகர்ஜி இயக்கத்தில் நடிகர்கள் ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் வார் - 2 படத்தில் நடித்திருந்தார்கள்.
2019ஆம் ஆண்டு வெளியான வார் படத்தின் முதல் பாகம் வெற்றியைப் பெற்றதைத் தொடர்ந்து இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் வருகிற ஆக. 14 ஆம் தேதி இப்படம் வெளியாகிறது.
ஜூனியர் என்டிஆர் பிறந்த நாளை முன்னிட்டு படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்தப் படத்தில் கியாரா அத்வானி நாயகியாக நடித்துள்ளார். இந்நிலையில், நடிகர் ஜூனியர் என்டிஆர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியதாவது:
வார் 2 படப்பிடிப்பு முடிந்தது. இந்தப் படத்திலிருந்து நிறைய கற்றுக்கொண்டேன்.
ஹிருத்திக் ரோஷன் சார் உடன் படப்பிடிப்பில் இருந்த நாள்கள் எல்லாம் சரவெடிதான். அவரது ஆற்றலை நான் எப்போதும் வியக்கும் ஒன்று. வார் 2 பயணத்தில் நான் அவரிடமிருந்து பலவற்றைக் கற்றுக்கொண்டேன்.
அயன் முகர்ஜி அற்புதமானவர். ரசிகர்களுக்கு ஆச்சரியங்களை வைத்திருக்கிறார். படத்தை திரையில் காண ஆவலாக காத்திருக்கிறேன் என்றார்.