செய்திகள் :

ஹெல்மெட் அணிந்து பேருந்தை இயக்கிய ஓட்டுநர்!

post image

நாடு முழுவதும் தொழிற்சங்கங்கள் இன்று வேலைநிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ள நிலையில், பாதுகாப்பு கருதி கேரள அரசுப் பேருந்து ஓட்டுநர் ஒருவர் ஹெல்மெட் அணிந்து பேருந்தை இயக்கியுள்ளார்.

தொழிலாளர்களுக்கு எதிரான மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள், கொள்கைகளுக்கு எதிராக மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு இன்று நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தது. அதன்படி நாடு முழுவதும் இன்று வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறுகிறது.

குறிப்பாக மேற்குவங்கம், ஒடிசா, கேரளம் ஆகிய மாநிலங்களவை போராட்டம் தீவிரமடைந்துள்ளது. கடைகள் மூடப்பட்டுள்ளதால் போக்குவரத்து சரிவர இயங்காததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வேலைநிறுத்த போராட்டத்தை மீறி பல பகுதிகளில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கேரளத்தில் பத்தினம்திட்டா பகுதியில் பாதுகாப்பு கருதி அரசுப் பேருந்து ஓட்டுநர் ஒருவர் ஹெல்மெட் அணிந்து பேருந்தை இயக்கியுள்ளார். அவரது விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அதேபோல மேற்குவங்கத்திலும் சில ஓட்டுநர்கள் பாதுகாப்பு கருதி ஹெல்மெட் அணிந்து பேருந்தை இயக்கி வருகின்றனர்.

As trade unions across the country have announced a strike today, a Kerala government bus driver wearing a helmet while driving for safety reasons.


மகாராஷ்டிரத்தை தொடர்ந்து பிகாரிலும் வாக்குத் திருட்டுக்கு முயற்சி: ராகுல் காந்தி

கர்நாடகத்தில் மாரடைப்பு மரணங்கள்: மருத்துவமனைகளில் குவியும் மக்கள்!

கர்நாடகத்தில் மாரடைப்பால் அதிகம் பேர் மரணமடைந்துள்ள நிலையில் அங்குள்ள மருத்துவமனைகளில் பரிசோதனை செய்ய மக்கள் கூட்டம் அதிகம் காணப்படுகிறது. கர்நாடக மாநிலம் ஹசன் மாவட்டத்தில் 40 நாள்களில் 23 பேர் மாரடைப... மேலும் பார்க்க

குஜராத்: பாலம் இடிந்து விழுந்ததில் 15 ஆக உயர்ந்த பலி!

குஜராத்தின் வதோதராவில் 40 ஆண்டுகள் பழைமையான பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் பலியானோர் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. இதுதொடர்பாக வதோதரா மாவட்ட ஆட்சியர் அனில் தமேலியா கூறுகையில், இந்த நிலையில்,... மேலும் பார்க்க

அவசரநிலை, இந்திரா காந்தியை விமர்சித்த சசி தரூர்!

அவசரநிலை காலம், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் வெளிப்படையாக விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.காங்கிரஸ் கட்சியின் நிர்வாகக் குழு உறுப்பினராகவும் திருவனந்தபுரம் மக... மேலும் பார்க்க

மனைவி மீது சந்தேகம்! குழந்தைக்கு டிஎன்ஏ சோதனைக்கு உத்தரவிட முடியாது

மும்பை: கணவருக்கு, தன்னுடைய மனைவி மீது ஏற்பட்ட சந்தேகத்தின் காரணமாக, குழந்தைக்கு டிஎன்ஏ சோதனை செய்ய அனுமதிக்க முடியாது என்று மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் கிளை உத்தரவிட்டுள்ளது.மேலும், விதிவிலக்... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் கனமழைக்கு 11 பேர் பலி!

பாகிஸ்தானின் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழைக்கு இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர். மாநிலத்தின் லாகூர், பஞ்சாப் மாகாணத்தில் சுற்றியுள்ள மாவட்டங்கள், பலுசிஸ்தானின் சில பகு... மேலும் பார்க்க

ராணா, பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா உள்பட 29 பேர் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு!

நடிகர்கள் ராணா டகுபதி, பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா உள்பட 29 பிரபலங்களுக்கு எதிராக அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.தெலங்கானாவின் மியாபூர் நகரைச் சேர்ந்த தொழிலதிபர் பி.எம்.பனீந்த்ரா சர்மா, ச... மேலும் பார்க்க