செய்திகள் :

ஹேலி மேத்யூஸ் சதம் வீண்; ஒருநாள் தொடரை கைப்பற்றிய இந்தியா!

post image

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 115 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி வதோதராவில் இன்று (டிசம்பர் 24) நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடியது.

சதம் விளாசிய ஹர்லீன் தியோல்

இந்திய அணியின் தொடக்க வீராங்கனைகளாக களமிறங்கிய ஸ்மிருதி மந்தனா மற்றும் பிரதீகா ராவல் அணிக்கு சிறப்பான தொடக்கத்தைத் தந்தனர். சிறப்பாக விளையாடிய இருவரும் அரைசதம் கடந்து அசத்தினர். இந்த இணை முதல் விக்கெட்டுக்கு 110 ரன்கள் சேர்த்தது. ஸ்மிருதி மந்தனா 47 பந்துகளில் 53 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆனார். அதில் 7 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். இதனையடுத்து, பிரதீகா ராவல் மற்றும் ஹர்லீன் தியோல் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை அதிரடியைத் தொடர்ந்தது.

இதையும் படிக்க: முதல் அரைமணி நேரத்தை மதியுங்கள்; ரிஷப் பந்த்துக்கு முன்னாள் கேப்டன் அறிவுரை!

பிரதீகா ராவல் 86 பந்துகளில் 76 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 10 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹர்லீன் தியோல் ஒருநாள் போட்டிகளில் முதல் முறையாக சதம் விளாசி அசத்தினார். அவர் 103 பந்துகளில் 115 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 16 பவுண்டரிகள் அடங்கும். கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் 22 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதிக் கட்டத்தில் அதிரடியாக விளையாடிய ஜெமிமா ரோட்ரிக்ஸ் 36 பந்துகளில் 52 ரன்கள் எடுத்தார். அதில் 6 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும்.

இறுதியில் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 358 ரன்கள் எடுத்தது.

தொடரைக் கைப்பற்றிய இந்தியா

359 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி மேற்கிந்தியத் தீவுகள் அணி களமிறங்கியது. அந்த அணியில் கேப்டன் ஹேலி மேத்யூஸ் தவிர முன்வரிசையில் களமிறங்கிய வீராங்கனைகள் பெரிதாக ரன்கள் குவிக்கத் தவறினர். குயினா ஜோசப் (15 ரன்கள்), நெரிஸ்ஸா கிராஃப்டன் (13 ரன்கள்), ரஷதா வில்லியம்ஸ் (0 ரன்) மற்றும் டீண்ட்ரா டாட்டின் (10 ரன்கள்) எடுத்து ஆட்டமிழந்தனர். இதனால், மேற்கிந்தியத் தீவுகள் 69 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இதையும் படிக்க: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிக்கான அதிகாரபூர்வ அட்டவணை வெளியீடு!

இந்த நிலையில், கேப்டன் ஹேலி மேத்யூஸுடன் ஷிமைன் கேம்பெல் ஜோடி சேர்ந்தார். இந்த இணை ஆட்டத்தின் பொறுப்பை உணர்ந்து விளையாடியது. இருப்பினும், ஷிமைன் கேம்பெல் 38 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பின், ஸைடா ஜேம்ஸ் 25 ரன்களும், எஃபி பிளட்சர் 22 ரன்களும் எடுத்தனர். தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் ஹேலி மேத்யூஸ் சதம் விளாசி அசத்தினார். அவர் 109 பந்துகளில் 106 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 13 பவுண்டரிகள் அடங்கும்.

ஹேலி மேத்யூஸ்

இறுதியில் 46.2 ஓவர்களின் முடிவில் 243 ரன்கள் எடுத்து மேற்கிந்தியத் தீவுகள் ஆட்டமிழந்தது. இந்தியா தரப்பில் பிரியா மிஸ்ரா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். தீப்தி சர்மா, டிட்டாஸ் சாது, பிரதீகா ராவல் தலா இரண்டு விக்கெட்டுகளையும், ரேணுகா சிங் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

இதையும் படிக்க: சுமையை அதிகரிக்க விரும்பவில்லை; இளம் வீரர்களை ஆதரிக்கும் ரோஹித் சர்மா!

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. ஹர்லீன் தியோல் ஆட்ட நாயகியாக தேர்வு செய்யப்பட்டார்.

டபிள்யூடிசி இறுதிப் போட்டிக்கான திட்டமிடலில் தென்னாப்பிரிக்கா..!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்கா இடம்பெறுமென கேப்டன் டெம்பா பவுமா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.இந்தாண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்கா தகுதிபெற... மேலும் பார்க்க

கொன்ஸ்டாஸ் வார்னரின் ‘குளோன்’ இல்லை: கிரேக் சேப்பல்

இளம் ஆஸி. வீரர் சாம் கொன்ஸ்டாஸ் முன்னாள் ஆஸி. டேவிட் வார்னரின் குளேன் இல்லை என கிரேக் சேப்பல் கருத்து தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்ட்டில் 19 வயதாகும் சாம் கொன்ஸ்டாஸ் மெல்போர்... மேலும் பார்க்க

ஜோ ரூட் முதலிடம்: ஆஸி வீரர்கள் முன்னேற்றம், இந்திய வீரர்கள் சரிவு!

ஐசிசி டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் ஜோ ரூட் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் 1-1 என சமநிலையில் உள்ளன. 4ஆவது போட்டி நாளை (டிச.26) மெல்போர்னி... மேலும் பார்க்க

தரவரிசையில் முதலிடம் பிடித்தார் பும்ரா..!

ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சு தரவரிசையில் ரவிச்சந்திரன் அஸ்வின் சாதனையை சமன்செய்துள்ளார் ஜஸ்பிரீத் பும்ரா. இந்தியாவின் வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா பாக்ஸிங் டே டெஸ்ட்டுக்கு முன்பாக உத்வேகம் கிடைக்... மேலும் பார்க்க

கேள்விக்குள்ளாகும் பும்ராவின் பந்துவீச்சு..! நீக்கப்படுவரா?

இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ராவின் பந்துவீச்சு குறித்து ஆஸி.யின் அனுபவம் வாய்ந்த வர்ணனையாளர் ஐயான் மௌரிஸ் கேள்வி எழுப்பியுள்ளார். முதல் டெஸ்ட்டில் இந்தியா 295 ரன்கள் வித்தியாசத்த... மேலும் பார்க்க

பாக்ஸிங் டே டெஸ்ட்: ஆஸி. பிளேயிங் லெவன் அறிவிப்பு!

பார்டர் கவாஸ்கர் தொடரின் 4ஆவது போட்டிக்கான ஆஸ்திரேலியாவின் ஃபிளேயிங் லெவன் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 3 போட்டிகள் முடிவடைந்த நிலையில் 1-1 என சமநிலையில் இருக்கிறது. 4ஆவது போட்டி மெல்போர்னில் நடக்கவிருக்... மேலும் பார்க்க