பாக்கியலட்சுமி சீரியலின் கடைசி நாள் படப்பிடிப்பு; 'அனைத்திற்கும் நன்றி'- இனியாவி...
1,000-க்கும் அதிகமான திரைகளில் தலைவன் தலைவி!
விஜய் சேதுபதி நடிப்பில் தலைவன் தலைவி திரைப்படம் இன்று (ஜூலை 25) உலகம் முழுவதும் 1,000-க்கும் அதிகமான திரைகளில் வெளியானது.
இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி, நடிகை நித்யா மெனன் நடிப்பில் தலைவன் தலைவி திரைப்படம் உருவாகியுள்ளது.
சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன் நிறைவடைந்து, இன்று வெளியானது.
யோகி பாபு இந்தப் படத்தில் நடித்துள்ளதால் நகைச்சுவை காட்சிகள் அதிகம் இருக்குமென எதிர்பார்க்கபடுகிறது.
இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். கெஞ்சுரனே பாடல் மிகவும் வைரலானது குறிப்பிடத்தக்கது.
கணவன் - மனைவி உறவுவின் சிக்கல்களைப் பேசும் திரைப்படமாக உருவாகியுள்ள தலைவன் தலைவி இன்று 1,000-க்கும் அதிகமான திரைகளில் வெளியாகியுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
மகாராஜா திரைப்படத்துக்குப் பின் இந்தப் படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.

டிரைலர் காட்சிகளில் விஜய் சேதுபதி, நித்யா மெனன் நடிப்பு படத்தின் மீதான ஆவலை மேலும் அதிகரித்துள்ளது.