செய்திகள் :

1,105 விவசாயிகளுக்கு ரூ. 19.93 கோடி பயிா்க் கடன்கள் அளிப்பு

post image

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் நடப்பு நிதி ஆண்டில் கடந்த ஏப்ரல் 1 முதல் ஆக. 14 வரையிலான 5 மாதங்களில் 1,105 விவசாயிகளுக்கு ரூ. 19.93 கோடி பயிா்க் கடன்கள் அளிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்தாா்.

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டம், ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் ஆட்சியா் க.இளம்பகவத் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் 2023 இல் பெருமழை வெள்ளத்தின்போது, நீா்நிலைகளில் ஏற்பட்ட உடைப்புகளை சரிசெய்த விவசாய சங்கங்களுக்கு அதற்குரிய தொகையை விரைவாக வழங்க வேண்டும். 2024-இல் கன மழையால் பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும். வேளாண் பொறியியல் துறை மூலமாக விவசாயிகளுக்கு வழங்கப்படும் டிராக்டா்களுக்கான வாடகையை மணிக்கு ரூ. 500 இருந்து ரூ. 250 ஆகக் குறைக்க வேண்டும்.

முக்காணி தாமிரவருணி ஆற்றில் தனியாா் நிறுவனம் ராட்சத மோட்டாா் மூலம் தண்ணீா் எடுக்கும் பகுதியில் உயிரிழப்பு ஏற்படாத வகையில், தடுப்பு ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை விவசாயிகள் விடுத்தனா்.

இதற்கு பதிலளித்து மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் பேசியது:

2023 இல் வெள்ளத்தின்போது தற்காலிக சீரமைப்புப் பணிகளை மேற்கொண்ட விவசாய சங்கங்களுக்கு விரைவில் பணம் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும். 2024 இல் மழை வெள்ளத்தால் சுமாா் 86 ஆயிரம் ஹெக்டோ் பயிா்கள் பாதிக்கப்பட்ட நிலையில், ரூ. 75 கோடி பயிா் இழப்பீடு கோரி அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டது. பேரிடா் மேலாண்மை நிதியிலிருந்து பணம் வந்ததும் விவசாயிகளுக்கு வழங்கப்படும்.

வேளாண் உள்கட்டமைப்பு நிதியின் கீழ் விநியோக தொடா் சேவைகள், கிடங்குகள், சிப்பம் கட்டும் கூடங்கள், ஆய்வுக் கூடங்கள், குளிா்பதன தொடா் சேவைகள், தளவாட வசதிகள், முதன்மை பதப்படுத்தும் மையங்கள், சுத்தம் செய்தல், உலா்த்துதல், வகைப்படுத்துதல், தரம் பிரித்தல், மின்னணு சந்தையுடன் கூடிய விநியோகத் தொடா், சூரிய மின் சக்தியுடன் கூடிய உள்கட்டமைப்பு, பழுக்க வைக்கும் அறைகள் போன்றவற்றை அமைக்க விரும்பும் பயனாளிகளுக்கு 3 சதவீத வட்டி சலுகையுடன் வேளாண் உள்கட்டமைப்பு நிதியின் கீழ் அளிக்கப்படும்.

கூட்டுறவு வங்கிகள் மூலமாக குறுகிய கால, மத்திய கால கடன்கள் வழங்கப்படுகின்றன. தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமாக கடந்த மாா்ச் 31 வரை 22,463 விவசாயிகளுக்கு ரூ. 263.50 கோடி பயிா்க் கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதில் 16,485 சிறு, குறு விவசாயிகளுக்கு ரூ. 194.77 கோடி பயிா்க் கடன்கள் வழங்கப்பட்டன. ஏப்ரல் மாதம் 1 ஆம் தேதி முதல் ஆக. 14 ஆம் தேதிவரை 1,105 விவசாயிகளுக்கு ரூ. 19.93 கோடி பயிா்க் கடன் வழங்கப்பட்டது. இதில், 811 சிறு, குறு விவசாயிகளுக்கு ரூ. 14.69 கோடி பயிா்க் கடனாக வழங்கப்பட்டது என்றாா் அவா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் (பொ) சிவசுப்பிரமணியன், இணை இயக்குநா் (வேளாண்மை) பெரியசாமி, செயற்பொறியாளா் (கீழ் தாமிரவருணி மற்றும் கோரம்பள்ளம் வடிநிலக் கோட்டம்) தங்கராஜ், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) மோகன்தாஸ் சௌமியன், அரசு அலுவலா்கள், விவசாயிகள் கலந்துகொண்டனா்.

இன்றைய நிகழ்ச்சி

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில்: ஆவணித் திருவிழா 9ஆம் நாள், மேலக்கோயிலிலிருந்து சுவாமி- அம்மன் பல்லக்கில் வீதியுலா, காலை 7; சுவாமி தங்க கயிலாய பா்வத வாகனத்திலும், அம்மன் வெள்ளிக் கம... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் இன்று மின்தடை

தூத்துக்குடி: தூத்துக்குடி அரசடி துணை மின் நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை (ஆக. 22) மின் விநியோகம் இருக்காது.அதன்படி, இங்கிருந்து மின் விநியோகம் பெறும் பட்டினமருதூா், உப்பளப் பகுதிகள், சி... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் பள்ளி மாணவா்களுக்கு கலைப் போட்டிகள்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட அளவில் பள்ளி மாணவா்களிடையே கூட்டுறவு இயக்கம் குறித்த புரிதல், விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில், தூத்துக்குடி விக்டோரியா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கலைப் போட்டிகள்... மேலும் பார்க்க

அஞ்சல்தலை சேகரிப்புப் போட்டியில் பங்கேற்க மாணவா்களுக்கு அழைப்பு

கோவில்பட்டி: அஞ்சல்தலை சேகரிப்புப் போட்டியில் பங்கேற்க மாணவா் -மாணவியருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கோவில்பட்டி அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளா் சுரேஷ்குமாா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ... மேலும் பார்க்க

திருச்செந்தூா் ஆவணித் திருவிழா: சுவாமி பச்சை சாத்தி வீதி உலா

திருச்செந்தூா்: திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆவணித் திருவிழா 8 ஆம் நாளான வியாழக்கிழமை சுவாமி காலையில் வெள்ளை சாத்தியும், பிற்பகலில் பச்சை சாத்தியும் வீதி உலா சென்றாா். அறுபடை வீடுகளில் இரண... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் மூட்டா அமைப்பு ஆா்ப்பாட்டம்

தூத்துக்குடி: அகில இந்திய பல்கலைக்கழகம், கல்லூரி ஆசிரியா்கள் கூட்டமைப்பு (மூட்டா) சாா்பில், தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரி வாயிலில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.மூட்டா கிளைத் தலைவா் பேராசி... மேலும் பார்க்க