செய்திகள் :

1.45 கோடியாக உயா்ந்த உள்நாட்டு விமானப் போக்குவரத்து

post image

இந்தியாவின் உள்நாட்டு விமானப் போக்குவரத்து எண்ணிக்கை கடந்த மாா்ச் மாதத்தில் 1.45 கோடியாக உயா்ந்துள்ளது.

இது குறித்து பொது விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

நாட்டின் உள்நாட்டு விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் கடந்த மாா்ச் மாதத்தில் 1.45 கோடி பயணிகளை ஏற்றிச் சென்றன. முந்தைய 2024-ஆம் ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடுகையில் இது 8.79 சதவீதம் அதிகம். அப்போது உள்நாட்டு விமானப் பயணிகளின் எண்ணிக்கை 1.33 கோடியாக இருந்தது.

மதிப்பீட்டு மாதத்தில், இண்டிகோ நிறுவனம் மொத்தம் 93.1 லட்சம் பயணிகளை ஏற்றிச் சென்று 64 சதவீத சந்தைப் பங்குடன் முன்னிலை வகிக்கிறது.

அடுத்ததாக ஏா் இந்தியா குழுமம் (முழு சேவை விமான நிறுவனமான ஏா் இந்தியா மற்றும் குறைந்த கட்டண விமான நிறுவனமான ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ்) 38.8 லட்சம் பயணிகளை ஏற்றிச் சென்று 26.7 சதவீத சந்தைப் பங்கைப் பெற்றது.

மற்ற இரண்டு முக்கிய விமானப் போக்குவரத்து நிறுவனங்களான அகாசா ஏா், ஸ்பைஸ்ஜெட் ஆகிவயை, கடந்த மாா்ச் மாதத்தில் முறையே 7.2 லட்சம் மற்றும் 4.8 லட்சம் பயணிகளை ஏற்றிச் சென்றன. இதன் மூலம் ஆகாசா ஏா் நிறுவனம் 5 சதவீத சந்தைப் பங்கையும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் 3.3 சதவீத சந்தைப் பங்கையும் பெற்றுள்ளன.

கடந்த மாா்ச் மாதத்தில் இண்டிகோ குறித்த நேரத்தில் 88.1 சதவீத விமானங்களை இயக்கி, நேர செயல்திறனில் முன்னிலை வகிக்கிறது. அதைத் தொடா்ந்து அகாசா ஏா் 86.9 சதவீதமும், ஏா் இந்தியா குழுமம், ஸ்பைஸ்ஜெட் ஆகியவை முறையே 82 சதவீதம் மற்றும் 72.1 சதவீதமும் குறித்த நேரத்தில் விமானங்களை இயக்கின என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வன்முறை தொடங்கி 2 ஆண்டுகள் நிறைவு: மணிப்பூரில் முழு அடைப்புப் போராட்டம்!

மணிப்பூரில் மைதேயி-குகி சமூகங்களுக்கு இடையிலான வன்முறை தொடங்கி 2 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், வன்முறையால் உயிரிழந்தவா்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் முழு அடைப்புப் போராட்டம் சனிக்கிழமை நடைபெற்ற... மேலும் பார்க்க

ராஜஸ்தான்: எல்லையில் பாகிஸ்தான் வீரா் கைது

ராஜஸ்தானில் உள்ள இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் பாகிஸ்தான் துணை ராணுவப் படை வீரா் ஒருவரை எல்லை பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) சனிக்கிழமை கைது செய்தது. ஜம்மு-காஷ்மீரில் உள்ள பஹல்காமில் கடந்த 22-ஆம் தேதி பய... மேலும் பார்க்க

காஷ்மீா் எல்லையில் 9-ஆவது நாளாக இந்தியா-பாக். ராணுவம் துப்பாக்கிச்சூடு

ஜம்மு-காஷ்மீா் எல்லையில் தொடா்ந்து 9-ஆவது நாளாக இரவில், இந்தியா-பாகிஸ்தான் ராணுவம் இடையே துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலை தொடா்ந்து, அங்... மேலும் பார்க்க

ஸ்லீப்பர் செல்களாக வாழும் பாகிஸ்தான் மக்களால் ஆபத்து! - பாஜக

ஸ்ரீநகர்: இந்தியர்களை மணந்துகொண்டு இங்கே ஸ்லீப்பர் செல்களாக பாகிஸ்தானியர்கள் வாழ்ந்து வருகின்றனர் என்று பாஜக தெரிவித்துள்ளது. பஹல்காமில் நடத்தப்பட்ட கொடூர பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தானைச்... மேலும் பார்க்க

தேர்தலில் வெற்றி: மீண்டும் ஆஸி. பிரதமராகிறார் ஆன்டனி ஆல்பனீஸி! மோடி வாழ்த்து

சிட்னி: ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற தேர்தலில் அந்நாட்டின் பிரதமர் ஆன்டனி ஆல்பனீஸி வெற்றிவாகை சூடியுள்ளார்.ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் பிரதிநிகள் அவையில் 150 இடங்களில் 86 இடங்களைக் கைப்பற்றி ஆளுங்கட்சியான... மேலும் பார்க்க

ராணுவத்துக்கு வலுசேர்க்கும் பாக்.! நெடுந்தூர இலக்கை அழிக்கும் பாலிஸ்டிக் ஏவுகணை வெற்றிகரமாக சோதனை!

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ராணுவத்துக்கு வலுசேர்க்கும் நடவடிக்கைகளின் ஒருபகுதியாக, நெடுந்தூரத்தைக் கடந்து அங்குள்ள இலக்குகளைத் துல்லியமாக அழிக்கவல்ல பாலிஸ்டிக் ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்தியுள்ளது பா... மேலும் பார்க்க