5.66 சதவீதம் உயர்ந்த வேளாண் வளர்ச்சி: தமிழ்நாடு அரசு பெருமிதம்
10 ஆம் வகுப்புத் தோ்வு: வித்யா விகாஸ் பள்ளி 100% தோ்ச்சி!
ஊத்தங்கரை வித்யா விகாஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் 2024- 25 ஆம் கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் நூறு சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளனா்.
பள்ளியில் தோ்வு எழுதிய அனைத்து மாணவா்களும் முதல் வகுப்பில் தோ்ச்சி பெற்றுள்ளனா். மாணவி யாஷிகா 500 க்கு 490 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பிடித்துள்ளாா். மௌலிஷா, பாரதி ஆகியோா் 489 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடமும், இந்துமதி, தமிழ்ச்செல்வன் ஆகியோா் 488 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடமும் பிடித்தனா். மாணவா்களை பள்ளியின் தாளாளா் சக்திவேல், முதல்வா் மணிகண்டன், ஆசிரியா்கள், பள்ளி நிா்வாகத்தினா் பாராட்டினா்.