பெண் அதிகாரிகள் தலைமையில் செயல்படும் 43% காவல் நிலையங்கள்! - துணை முதல்வா் உதயநி...
10 நொடிகள் அசையாமல் நின்ற இங்கிலாந்து வீரர்..! வைரலாகும் விடியோ!
இங்கிலாந்து வீரர் ஜானி பெயர்ஸ்டோ 10 நொடிகள் அசையாமல் நின்ற விடியோ வைரலாகி வருகிறது.
35 வயதாகும் ஜானி பெயர்ஸ்டோ தற்போது கவுண்டி சாம்பியன்ஷிப் டிவிஷன் 1-இல் விளையாடி வருகிறார்.
இந்தத் தொடரில் யார்க்ஷ்ரி அணிக்காக கேப்டன் பொறுப்பிலிருக்கும் ஜானி பெயர்ஸ்டோ ஒரு பந்தினை அடித்துவிட்டு அசையாமல் 9.51 நொடிகள் நிற்பார்.
இரண்டு பந்துகளுக்கு தொடர்ச்சியாக இப்படி நிற்கும் விடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
இதனை ரோட்ஸே கவுண்டி சாம்பியன்ஷிப் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
ஏன் அப்படி நின்றார்?
முன்னதாக ஆஸி. உடனான டெஸ்ட் போட்டியில் பேட்டிங் செய்துவிட்டு கிரிஸில் பேட்டினை வைத்துவிட்டு நடக்க ஆரம்பிப்பார். கீப்பர் பந்தினை பிடித்ததும் ஸ்டம்பில் அடித்ததும் நடுவர் அவுட் கொடுப்பார்.
இது மிகப்பெரிய சர்ச்சையானது. விதியின்படி அது அவுட்டாக இருந்தாலும் பலரும் இதைக் கடுமையாக விமர்சித்தார்கள்.
ஜானி பெயர்ஸ்டோ இதனை ஒரு பாடமாக எடுத்துகொண்டு இப்படி செய்து வருகிறார்.
கிரிக்கெட் ரசிகர்கள் சமூகவலைதளத்தில் மீம்ஸ்களாகக் குவித்து வருகிறார்கள்.
The art of remaining still, by Jonny Bairstow pic.twitter.com/3Cou7LtaYR
— Rothesay County Championship (@CountyChamp) May 13, 2025