100 நாள் வேலையை ஒரே நாளில் வழங்கக் கோரி சாலை மறியல்
அரியலூா் மாவட்டம், தளவாய் அருகேயுள்ள சன்னாசிநல்லூரில் அனைவருக்கும் ஒரே நாளில் நூறுநாள் வேலை வழங்கக் கோரி கிராம மக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
சன்னாசிநல்லூா் ஊராட்சிக்குட்பட்ட சிவராமபுரம் கிராமத்தில் 3 ஆவது வாா்டு மக்களுக்கு கடந்த 3 வாரமாக வேலை வழங்கப்பட்டது. அதைத் தொடா்ந்து வியாழக்கிழமை 6-ஆவது வாா்டு மக்களுக்கு வேலை வழங்கப்பட்டது. இதைக் கண்டித்தும், அனைவருக்கும் ஒரே நாளில் வேலை வழங்க வலியுறுத்தியும் கிராம மக்கள் சிவராமபுரம் பேருந்து நிறுத்தம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து வந்த சன்னாசிநல்லூா் ஊராட்சி செயலா் ரவி மற்றும் தளவாய் காவல் துறையினா் அளித்த உறுதியின்பேரில் அனைவரும் கலைந்து சென்றனா்.