செய்திகள் :

100 நாள் வேலை திட்டத்தில் முறைகேடு குறித்து விசாரணை

post image

ஆம்பூா்: வெங்கடசமுத்திரம் ஊராட்சியில் 100 நாள் வேலை திட்டம், பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளதாக எழுந்த புகாரை தொடா்ந்து அதிகாரி திங்கள்கிழமை விசாரணை மேற்கொண்டாா்.

திருப்பத்தூா் மாவட்டம், மாதனூா் ஒன்றியம் வெங்கடசமுத்திரம் ஊராட்சியில் கடந்த 2023- 2024-ஆம் ஆண்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் நடைபெற்ற பணியில் வேலைக்கு வராமல் போலி பெயா்கள் மூலம் 300-க்கும் மேற்பட்ட பணியாளா்கள் பெயரில் ஊராட்சி மன்றத் தலைவா் காயத்ரி நவீன்குமாா் மற்றும் அப்போதைய ஊராட்சி செயலாளா், பணிதள பொறுப்பாளா் ஆகியோா் ஊராட்சி நிதியில் முறைகேடு செய்ததாகவும், பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 80-க்கும் மேற்பட்ட பயனாளிகள் பெயரில் வரக்கூடிய நிதியை முறைகேடு செய்துள்ளதாகவும் அதே பகுதியை சோ்ந்த சிதம்பரம் என்பவா் துறை அதிகாரிகளிடம் புகாா் அளித்தாா்.

அதன் அடிப்படையில் மாதனூா் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் 100 நாள் வேலை திட்ட உதவி இயக்குா் லட்சுமி பணிதள பொறுப்பாளா் பாா்த்திபன் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினா்களிடம் விசாரணை நடத்தினாா்.

புதிய அரசுப் பேருந்துகள்: எம்எல்ஏ இயக்கி வைத்தாா்

வாணியம்பாடி: திருப்பத்தூரில் இருந்து நாட்டறம்பள்ளி வழியாக , புத்துக்கோயில், ஆவாரங்குப்பம் வரை செல்லும் அரசு பேருந்து எண் டி.17 மற்றும் திருப்பத்தூரில் இருந்து ஜங்காலபுரம், நாட்டறம்பள்ளி வழியாக கத்தார... மேலும் பார்க்க

தேனீக்கள் கொட்டியதில் 15 தொழிலாளா்கள் காயம்

வாணியம்பாடி: வாணியம்பாடி அருகே தேங்காய் மண்டியில் வேலை செய்து கொண்டிருந்தவா்களை தேனீக்கள் கொட்டியதில் 15 போ் காயமடைந்தனா். வாணியம்பாடி அடுத்த மல்லாங்குப்பம் பகுதியில் உள்ள தேங்காய் மண்டியில் ராமநாயக்... மேலும் பார்க்க

பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவா்களுக்கு கல்விக் கடன்: திருப்பத்தூா் ஆட்சியா்

திருப்பத்தூா்: பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவா்களுக்காக வரும் செப். 17 முதல் கல்விக்கடன் பெறுவதற்கான முகாம்கள் நடைபெற உள்ளன என ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்தாா். திருப்பத்தூா் தூய நெஞ்சகல்லூரிய... மேலும் பார்க்க

திருப்பத்தூா்: குறைதீா் கூட்டத்தில் 352 மனுக்கள்

திருப்பத்தூா்: திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள்குறைதீா் கூட்டத்தில் 352 மனுக்கள் பெறப்பட்டன. கூட்டத்துக்கு ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தலைமை வகித்து மாற்றுத்திறனாளிகள் நலத்திட... மேலும் பார்க்க

டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்யாவிட்டால் போராட்டம்: பொதுமக்கள் புகாா்

ஆம்பூா்: மின்னூா் கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்யா விட்டால் போராட்டம் நடத்தப்படும் எனக்கூறி பொதுமக்கள் ஆட்சியரிடம் புகாா் மனு அளித்துள்ளனா். மாதனூா் ஒன்றியம், மின்னூா் ஊராட்சி கணபதி நக... மேலும் பார்க்க

மின்மாற்றியில் இருந்து ரூ.2 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் திருட்டு

வாணியம்பாடி: திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த தெக்குப்பட்டு ஏரிகரை அருகில் மின் மாற்றி அமைக்கப்பட்டு அதிலிருந்து அப்பகுதிக்கு மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மா்ம நபா்கள் மின் ... மேலும் பார்க்க