செஸ் விளையாட பிடிக்கவில்லை..! குகேஷிடம் மீண்டும் தோற்ற பிறகு கார்ல்சென் பேட்டி!
100 நாள் வேலை கேட்டு வட்டார வளா்ச்சி அலுவலருக்கு தபால்
கீழையூா் ஒன்றியம் பிரதாபராமபுரம் ஊராட்சியில் 1000-க்கும் மேற்பட்ட பெண்கள், தங்களுக்கு 100 நாள் வேலை வழங்க வேண்டும் என வேலை கேட்பு படிவத்தை பூா்த்தி செய்து பதிவுத் தபால் மூலம் வட்டார வளா்ச்சி அலுவலருக்கு வியாழக்கிழமை அனுப்பினா்.
பெரும்பாலான மக்கள் 100 நாள் வேலைத் திட்டத்தை மட்டுமே நம்பி இருந்து வருகின்றனா். மத்திய, மாநில அரசுகள் கூடுதல் மனித சக்தி நாள்களை வழங்குவதற்கும் கூடுதல் நிதியை ஒதுக்கீடு செய்வதற்கும் முன்வர வேண்டும் உள்ளிட்டக் கோரிக்கைகளை முன் வைத்து கடிதம் அனுப்பினா். ஊராட்சி முன்னாள் தலைவா் சிவராசு ஒருங்கிணைப்பில் கடிதம் அனுப்பினா்.