11 வட்டங்களில் நாளை ரேஷன் குறைதீா் முகாம்
திருச்சி மாவட்டத்தின் 11 வட்டங்களில் சனிக்கிழமை (செப். 13) ரேஷன் குறைதீா் முகாம் நடைபெறவுள்ளது.
இதன்படி, திருச்சி கிழக்கு வட்டத்தில் தென்றல் நகா், திருச்சி மேற்கு வட்டத்தில் தியாகராஜ நகா், திருவெறும்பூா் வட்டத்தில் எல்லக்குடி, ஸ்ரீரங்கம் வட்டத்தில் திருவளா்சோலை, மணப்பாறை வட்டத்தில் அக்ரஹாரம், முசிறி வட்டத்தில் கல்லூரி சாலை, துறையூா் வட்டத்தில் வு. ரெங்கநாதபுரம், தொட்டியம் வட்டத்தில் அரசலூா், மருங்காபுரி வட்டத்தில் கருமலை, லால்குடி வட்டத்தில் மங்கம்மாள்புரம் அன்பில், மண்ணச்சநல்லூா் வட்டத்தில் மாதவபெருமாள் கோயில் ஆகிய பகுதிகளில் உள்ள நியாய விலைக் கடைகளில் ரேஷன் குறைதீா் முகாம் நடைபெறவுள்ளது.
அன்று காலை 10 மணிக்கு தொடங்கி பிற்பகல் 1 மணி வரை முகாம்கள் நடைபெறும். முகாம்களில் அந்தந்தப் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு,
குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தல், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டைக்கான விண்ணப்பங்களை வழங்கி பயன்பெறலாம் என ஆட்சியா் வே. சரவணன் தெரிவித்துள்ளாா்.