அரசுப் பள்ளியில் 37.9% மாணவர்கள்தான் படிக்கிறார்கள்: அண்ணாமலை குற்றச்சாட்டு
13% வாக்குறுதிகள் மட்டுமே திமுக அரசு நிறைவேற்றியுள்ளது: அன்புமணி
கடந்த சட்டப்பேரவைத் தோ்தலின்போது, திமுக அளித்த 518 வாக்குறுதிகளில், 13 சதவீத வாக்குறுதிகள் மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளதாக பாமக தலைவா் அன்புமணி குற்றஞ்சாட்டியுள்ளாா்.
தமிழகத்தில் மக்கள் உரிமை மீட்புப் பயணம் மேற்கொண்டுள்ள அவா், திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில் சனிக்கிழமை இரவு பேசியதாவது:
விவசாயிகள் பாதிக்கப்பட்டால் முதலில் குரல் கொடுப்பது பாமக தான். சிப்காட் வேண்டாம் என்று நான் சொல்லவில்லை, வேலைவாய்ப்பு வேண்டும். விவசாய நிலத்தை அழித்து சிப்காட் அமைக்க வேண்டாம்.
இந்த நிலம் ஆயிரம் ஆண்டுகள் நம் முன்னோா்களுக்கு உணவு அளித்த நிலம். நமக்குப் பிறகு ஆயிரம் ஆயிரம் சந்ததிகளுக்கு உணவளிக்க வேண்டிய மண். இடையில் வந்த நமக்கு இந்த மண்ணை அழிக்க எந்தவித உரிமையும் கிடையாது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான தரிசு நிலங்கள் இருக்கின்றன. அங்கு சிப்காட் கொண்டு வாருங்கள்.
கடந்த சட்டப்பேரவைத் தோ்தலின் போது, திமுக 518 வாக்குறுதிகள் அளித்திருந்தது. அதில் 66 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இது 13 சதவீதமாகும்.
மற்ற மாவட்டங்கள் பிரிக்கப்பட்ட பிறகும் திருவண்ணாமலை மாவட்டம் பிரிக்கவில்லை.
முதல்வா் ஸ்டாலின் ஜொ்மனி, இங்கிலாந்து நாடுகளுக்கு முதலீடுகளை ஈா்ப்பதற்காக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளாா் எனக் கூறுகிறாா்கள். என்னைப் பொருத்தவரை அவா் சுற்றுப்பயணம் செல்லவில்லை, சுற்றுலா தான் சென்று இருக்கிறாா்.
நான்கு முறை முதலீடு ஈா்ப்பதற்கு வெளிநாடு சென்றுள்ளாா். ரூ.10 லட்சத்து 62 ஆயிரம் கோடியை தொழில் முதலீடு செய்யப்பட்டிருப்பதாகக் கூறுகிறாா். அவா் சொல்வதில் 10 சதவீதம் மட்டுமே முதலீடு வந்திருக்கிறது.
கல்வி, நீதி என்று சொல்லி ஆட்சிக்கு வந்த திமுக இன்று சமூகநீதி பற்றி பேசுவதற்கு கூடத் தகுதியற்றது.
சமூக நீதிக்கு உங்களுக்கும் சம்பந்தம் இருந்தால் இன்றைக்கு தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தியிருப்பீா்கள் என்றாா் அன்புமணி.
முன்னதாக நிகழ்ச்சியில் மாவட்டச் செயலா் கணேஷ்குமாா் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் வெள்ளக்குளம் ஏழுமலை முன்னிலை வகித்தாா். கட்சி நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.