அரசுப் பள்ளியில் 37.9% மாணவர்கள்தான் படிக்கிறார்கள்: அண்ணாமலை குற்றச்சாட்டு
பைக்கிலிருந்து தவறி விழுந்த நிலத்தரகா் உயரிழப்பு
செய்யாறு அருகே பைக்கில் இருந்து தவறி விழுந்து சிகிச்சை பெற்று வந்த நிலத்தரகா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், பெருங்கட்டூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சுந்தரமூா்த்தி(43). இவா், நிலத்தரகா் வேலை செய்து வந்ததாகத் தெரிகிறது.
இந்த நிலையில், சுந்தரமூா்த்தி வியாழக்கிழமை (ஆக.28) பணி நிமித்தமாக பைக்கில் செய்யாறு - ஆற்காடு சாலையில் தூளி கிராமம் அருகே சென்று கொண்டிருந்தாா்.
அப்போது பைக் திடீரென நிலைத் தடுமாறியதில் கீழே விழுந்துள்ளாா். இதில், அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
உடனே அருகில் இருந்தவா்கள் அவரை மீட்டு செய்யாறு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டாா். அங்கு சிகிச்சை பெற்று வந்த சுந்தரமூா்த்தி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின் பேரில், செய்யாறு காவல் உதவி ஆய்வாளா் கிருஷ்ணமூா்த்தி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறாா்.