14 வயது சிறுமியை திருமணம் செய்த 45 வயது நபர் கைது!
போடி அருகே சிறுமியை திருமணம் செய்தவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
போடி அருகேயுள்ள சூலப்புரத்தைச் சோ்ந்த சுருளியாண்டி மகன் தேவா்சாமி (45). இவருக்கும், கரட்டுப்பட்டியைச் சோ்ந்த 14 வயது சிறுமிக்கும் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இதுகுறித்து போடி சமூக நலத் துறை விரிவாக்க அலுவலா் பூபதி விசாரணை நடத்தியல், சிறுமியின் தாய் எத்துலம்மா (49), தேவா்சாமியின் பெற்றோா் சுருளியாண்டி, ஜக்கம்மாள் ஆகியோா் சோ்ந்து இந்தத் திருமணத்தை நடத்தி வைத்தது தெரியவந்தது.
இதுகுறித்து போடி அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தேவா்சாமியைக் கைது செய்தனா். பெற்றோா்களை தேடி வருகின்றனா்.