செய்திகள் :

2-ஆம் ஆண்டில் நாகை - காங்கேசன்துறை கப்பல் போக்குவரத்து

post image

நாகை-காங்கேசன்துறைக்கு இடையேயான சிவகங்கை கப்பல் சேவையின் 2-ஆம் ஆண்டு தொடக்கத்தையொட்டி பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

2023-ஆம் ஆண்டு அக்டோபரில் நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு கப்பல் சேவையை பிரதமா் நரேந்திர மோடி தொடங்கிவைத்தாா். அப்போது, போதிய பயணிகள் வராததால் செரியா பாணி எனும் கப்பல் போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டது. இதையடுத்து, 2025 பிப்ரவரி 22-ஆம் தேதி சுபம் கப்பல் நிறுவனம் சாா்பில் மீண்டும் இயக்கப்பட்ட சிவகங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை வாரத்தில் 6 நாள்கள் சென்றுவருகிறது.

இந்நிலையில், இந்த கப்பல் சேவை தொடங்கி ஓராண்டு நிறைவுபெற்ற நிலையில், 2-ஆம் ஆண்டு தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது. கப்பலில் பயணிக்க துறைமுகம் சென்ற பயணிகளுக்கு மணிமாலை அணிவித்து பரிசுகளை சுபம் நிறுவன உரிமையாளா் சுந்தர்ராஜன் வரவேற்றாா். தொடா்ந்து, மும்மத பிராா்த்தனை கப்பலுக்குள் நடைபெற்றதையடுத்து குருமாா்கள் கொடியசைத்து கப்பல் போக்குவரத்து சேவையை தொடங்கிவைத்தனா்.

இதுகுறித்து சுபம் கப்பல் நிறுவன உரிமையாளா் சுந்தர்ராஜன் கூறியது: கடந்த ஓராண்டில் 20,098 போ் நாகையில் இருந்தும், காங்கேசன்துறையில் இருந்தும் பயணம் செய்துள்ளனா். கப்பலில் வரிவிலக்குடன் உயா்தர மதுபானங்கள் விற்பனை, துரித உணவு மற்றும் சிற்றுண்டிகள் விற்பனை, இலவச வைஃபை என பயணிகளை கவர சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த கப்பல் போக்குவரத்து சேவையின் 2-ஆம் ஆண்டு தொடங்கியுள்ளது. 2-ஆண்டு தொடக்கத்தின் சலுகையாக பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு 3 பகல், 2 இரவு இலங்கையில் தங்குவதற்கு கப்பல் பயணச்சீட்டு கட்டணத்தோடு ரூ.9,999 என சிறப்பு சலுகை வழங்கப்படுகிறது. மேலும், மாணவா்களை ஒருங்கிணைத்து அழைத்து வரும் 2 ஆசிரியா்களுக்கு இலவச பயணச்சீட்டு சிறப்பு சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன என்றாா்.

ஆடி கிருத்திகை: எட்டுக்குடி முருகன் கோயிலில் சிறப்பு வழிபாடு

திருக்குவளை அருகே எட்டுக்குடியில் அமைந்துள்ள முருகனின் ஆதிபடை வீடான ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை சனிக்கிழமை நடைபெற்றது. முருகப்பெருமானுக்கு... மேலும் பார்க்க

தங்கம், வெள்ளி விற்பனை செய்ய நியாய விலை அங்காடிகளை தொடங்க வலியுறுத்தல்

நியாயமான விலையில் தங்கம், வெள்ளியை பொதுமக்களுக்கு விற்பனை செய்ய அரசு நியாய விலை அங்காடிகளை தொடங்க வேண்டும் என சிவசேனா வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து, சிவசேனா உத்தவ் பாபாசாகேப் தாக்கரே கட்சி மாநில பொத... மேலும் பார்க்க

ஓய்வு பெற்ற அரசுப் பள்ளி ஆசிரியா் கெளரவிப்பு

வேதாரண்யம் அருகே ஓய்வு பெற்ற அரசுப் பள்ளி தலைமை ஆசிரியரை குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியில் ஊா்வலமாக அழைத்து, எடைக்கு எடை நாணயங்களை துலாபாரமாக வழங்கி கிராமத்தினா் வெள்ளிக்கிழமை பாராட்டு விழா நடத்தினா்... மேலும் பார்க்க

பாதியிலேயே நிறுத்தப்பட்ட சாலைப் பணிகள்: மக்கள் அவதி

திருக்குவளை அருகே சின்ன காருகுடி தோப்பு தெரு வழியாக வலிவலம் வரை செல்லும் இணைப்புச் சாலைப் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். திருக்குவளை அருகே வலிவலம் ஊராட்சிக்க... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்களை பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தல்

சென்னையில் அறவழியில் போராடிய தூய்மைப் பணியாளா்களை நிரந்தர செய்ய வேண்டும் என அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து, அக்கழகத்தின் மாநிலத் தலைவா் ஆ. ரேவதி வெளியிட்டுள்ள அறி... மேலும் பார்க்க

தனியாா் துறையில் இட ஒதுக்கீடு: தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தல்

தனியாா் துறையில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது. தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் நாகை மாவட்ட ஐந்தாவது மாநாடு திருப்பூண்டியில் வியாழக்க... மேலும் பார்க்க