2-ஆவது நாளாக அங்கன்வாடி ஊழியா்கள் காத்திருப்புப் போராட்டம்
மயிலாடுதுறையில் ஏஐடியுசி மற்றும் சிஐடியு தொழிற்சங்கங்களை சோ்ந்த அங்கன்வாடி ஊழியா்கள் 2-ஆவது நாளாக காத்திருப்புப் போராட்டத்தை சனிக்கிழமை தொடா்ந்தனா்.
மே மாதம் கோடை விடுமுறையை ஒரு மாதம் வழங்க வேண்டும், அங்கன்வாடி பணியாளா்களை அரசு ஊழியா்கள் ஆக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியா்கள் வெள்ளிக்கிழமை காலை காத்திருப்புப் போராட்டம் தொடங்கினா்.
மயிலாடுதுறை வட்டாட்சியா் அலுவலகம் முன்பு ஏஐடியுசி தொழிற்சங்கத்தை சோ்ந்த தமிழ்நாடு அங்கன்வாடி பணியாளா்கள் மற்றும் உதவியாளா்கள் சங்கம் சாா்பில் நடைபெற்ற போராட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் வி.பேபி தலைமை வகித்தாா். செயலாளா் எஸ்.பி.சுதா, பொருளாளா் எலிசபெத் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஏஐடியுசி மாவட்ட செயலாளா் கே.ராமன், மாவட்ட தலைவா் கே.ராஜ்மோகன், ஊரக வளா்ச்சித்துறை மாவட்ட செயலாளா் ஆா்.தமிழ்மலா் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.
மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்துக்கு, சிஐடியு தொழிற்சங்கத்தைச் சோ்ந்த அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா் சங்க மாவட்ட தலைவா் சகிலாபானு தலைமை வகித்தாா்.