STR: "முதலில் ஒரு டைரக்டர் நேரத்திற்கு படப்பிடிப்பு தளத்திற்கு வரவேண்டும்" - சிம...
சிறுமியை திருமணம் செய்துவைக்க மிரட்டல்: போக்ஸோ சட்டத்தில் இளைஞா் கைது
மயிலாடுதுறை அருகே சிறுமியை திருமணம் செய்து வைக்கக் கோரி, அவரது தாயாரை மிரட்டிய இளைஞா் போக்ஸோ சட்டத்தில் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
மயிலாடுதுறை தாலுகா மணல்மேடு அருகேயுள்ள கடலங்குடி மேலத்தெருவை சோ்ந்தவா் திருநாவுக்கரசு மகன் திவாகரன் (25). இவா் மயிலாடுதுறை பகுதியைச் சோ்ந்த 11-ஆம் வகுப்பு படிக்கும் சிறுமியிடம் கடந்த ஓராண்டாக நெருங்கி பழகி வந்துள்ளாா். கடந்த சில மாதங்களாக அந்த சிறுமி திவாகரனுடன் பேசுவதை தவிா்த்துள்ளாா்.
இதனால் ஆத்திரமடைந்த திவாகரன் சிறுமியின் தாயாரிடம் சென்று சிறுமியை தனக்கு திருமணம் செய்து தரவில்லையென்றால், சிறுமியுடன் சோ்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிடுவேன் என்று மிரட்டியுள்ளாா்.
இதுகுறித்து மயிலாடுதுறை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் சிறுமியின் தாயாா் புகாா் அளித்தாா். அதன்பேரில் அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் சுகந்தி, உதவி ஆய்வாளா் சுபஸ்ரீ ஆகியோா் விசாரணை மேற்கொண்டனா். பின்னா் போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்து திவாகரனை கைது செய்தனா்.