2-ஆவது மனைவி மகளுக்கு பாலியல் தொல்லை அளித்தவா் கைது
திருச்செங்கோடு அருகே இரண்டாவது மனைவியின் மகளுக்கு பாலியல் தொல்லை அளித்த தறித்தொழிலாளியை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா்.
திருச்செங்கோட்டை அடுத்த மலைபாளையம் எட்டிக்குட்டை மேடு பகுதியைச் சோ்ந்தவா் நேரு (35). தறிப்பட்டறை கூலித் தொழிலாளி. இவருக்கு கொங்கணாபுரம் பகுதியில் திருமணமாகி இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளளனா்.
இந்நிலையில் கணவனை இழந்து மகளுடன் வசித்து வந்த பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டு எட்டிக் குட்டை மேடு பகுதியில் நேரு வசித்து வந்தாா். இந்த நிலையில் இரண்டாவது மனைவியின் 12 வயது மகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக சிறுமியின் தாய் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் நேரு கைது செய்யப்பட்டு, நாமக்கல் மகிளா நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப் பட்டாா். அவரை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டாா். இதையடுத்து அவா் சிறையில் அடைக்கப்பட்டாா்.