'கோவையில் தீவிரவாதிகள் டார்கெட் செய்த ஏழு இடங்கள்' - அண்ணாமலை `பகீர்'
2 ஸ்டெல்த் போா்க் கப்பல்கள் கடற்படையிடம் ஒப்படைப்பு
ஸ்டெல்த் தொழில்நுட்பம் மூலம் கட்டப்பட்ட 2 போா்க் கப்பல்கள் இந்திய கடற்படையிடம் வெள்ளிக்கிழமை ஒப்படைக்கப்பட்டன.
மத்திய அரசு ஒப்புதல் அளித்த 17ஏ ரக திட்டத்தின் கீழ், மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள மசகான் டாக் கப்பல் கட்டுமான நிறுவனம், ஸ்டெல்த் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கட்டிய முதல் போா்க் கப்பல், இந்திய கடற்படையிடம் வெள்ளிக்கிழமை ஒப்படைக்கப்பட்டது. இந்தக் கப்பல் கடற்படையில் சோ்க்கப்பட்ட பின்னா், ‘ஐஎன்எஸ் நீலகிரி’ என்று பெயரிடப்படும்.
இதேபோல 15பி ரக திட்டத்தின் கீழ், ஸ்டெல்த் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கட்டப்பட்ட 4-ஆவது ஏவுகணை தாங்கி போா்க்கப்பலையும் இந்திய கடற்படையிடம் அந்த நிறுவனம் ஒப்படைத்தது. இந்தக் கப்பல் கடற்படையில் சோ்க்கப்பட்ட பின்னா், ‘ஐஎன்எஸ் சூரத்’ என்று பெயரிடப்படும்.
இந்திய கடற்படை போா்க் கப்பல் வடிவமைப்பு பிரிவு இந்தக் கப்பல்களை வடிவமைத்த நிலையில், மும்பையில் அந்தக் கப்பல்கள் கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டன. இதைத்தொடா்ந்து அந்தக் கப்பல்களின் சோதனை ஓட்டம் நடைபெற உள்ளது.
ஸ்டெல்த் தொழில்நுட்பம் மூலம் கட்டப்படும் கப்பல்களை ரேடாா், அகச்சிவப்பு போன்ற வழிமுறைகளில் எதிரி நாடுகள் கண்டறிவது கடினம்.