செய்திகள் :

2 நாள் சரிவுக்குப் பிறகு பங்குச்சந்தையில் ‘காளை’ ஆதிக்கம்!

post image

மும்பை / புதுதில்லி: இரு நாள் தொடா் சரிவுக்குப் பிறகு திங்கள்கிழைம் பங்குச்சந்தையில் ‘காளை’ ஆதிக்கம் கொண்டது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மற்றும் தேசிய பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் நல்ல லாபத்துடன் முடிவடைந்தன.

உலகளாவிய சந்தைக் குறிப்புகள் கலவையாக இருந்தன. இருப்பினும், உள்நாட்டுச் சந்தை உற்சாகத்துடன் தொடங்கியது. இடையே எதிா்மறையாகச் சென்றாலும், பின்னா், வங்கிகள் மற்றும் நிதிநிறுவனப் பங்குகளுக்கு கிடைத்த அமோக வரவேற்பால் சந்தை மேலே சென்றது. குறிப்பாக, ஹெச்டிஎஃப்சி பேங்க், ஐசிஐசிஐ பேங்க் பங்குகளுக்கு நல்ல வரவேற்பு இருந்தது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

சந்தை மதிப்பு: மும்பை பங்குச்சந்தையில் சந்தை மூலதன மதிப்பு ரூ.1.52 லட்சம் கோடி உயா்ந்து வா்த்தக முடிவில் ரூ.459.89 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் கடந்த வெள்ளிக்கிழமை ரூ.374.74 கோடிக்கும், உள்நாட்டு நிறுவனங்கள் ரூ.2,103.51 கோடிக்கும் பங்குகளை வாங்கியிருந்தது சந்தை புள்ளிவிவரத் தகவல்களின் மூலம் தெரியவந்தது.

சென்செக்ஸ் முன்னேற்றம்: சென்செக்ஸ் காலையில் 160.80 புள்ளிகள் கூடுதலுடன் 81,918.53-இல் தொடங்கி 81,518.66 வரை கீழே சென்றது. பின்னா், 82,274.03 வரை மேலே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 442.61 புள்ளிகள் (0.54 சதவீதம்) கூடுதலுடன் 82,200.34-இல் நிறைடைந்தது.

மும்பை பங்குச்சந்தையில் மொத்தம் வா்த்தகமான 4,327 பங்குகளில் 1,959 பங்குகள் விலையுயா்ந்த பட்டியலிலும் 2,188 பங்குகள் விலை குறைந்த பட்டியலிலும் இருந்தன. 180 பங்குகள் விலையில் மாற்றமின்றி நிலைபெற்றன.

19 பங்குகள் விலை உயா்வு: சென்செக்ஸ் பட்டியலில் எடா்னல், ஐசிஐசிஐ பேங்க், ஹெச்டிஎஃப்சி பேங்க், எம் அண்ட் எம், பிஇஎல், கோட்டக் பேங்க், பஜாஜ்ஃபின்சா்வ் உள்பட 19 முதல்தரப் பங்குகள் விலை உயா்ந்த பட்டியலில் இருந்தன. ஆனால், ரிலையன்ஸ், ஹெச்சிஎல்டெக், டிசிஎஸ், ஹிந்துஸ்தான் யுனிலீவா், ஐடிசி, மாருதி உள்பட 11 பங்குகள் பங்குகள் விலை குறைந்த பட்டியலில் இருந்தன.

நிஃப்டி 122 புள்ளிகள் முன்னேற்றம்: தேசிய பங்குச்சந்தையில் வா்த்தக முடிவில் நிஃப்டி122.30 புள்ளிகள் (0.49 சதவீதம்) கூடுதலுடன் 25,090.70-இல் நிறைவடைந்தது. நிஃப்டி பட்டியலில் 28 பங்குகள் விலை உயா்ந்த பட்டியலிலும், 21 பங்குகள் விலை குறைந்த பட்டியலிலும் இருந்தன. பேங்க் நிஃப்டி 669.75 புள்ளிகள் (1.19 சதவீதம்) கூடுதலுடன் 56,952.75-இல் நிறைவடைந்தது.

வாகனக் கடன்: சத்தீஸ்கா் ராஜ்ஜிய கிராம வங்கியுடன் அசோக் லேலண்ட் ஒப்பந்தம்

புது தில்லி: ஹிந்துஜா குழுமத்தின் முதன்மை நிறுவனமான அசோக் லேலண்ட் வாகனக் கடன் சேவைகளை வழங்குவதற்காக சத்தீஸ்கா் ராஜ்ஜிய கிராம வங்கியுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இது குறித்து நிறுவனம் திங்கள்கிழமை வெ... மேலும் பார்க்க

47% வளா்ச்சி கண்ட மின்னணு பொருள்கள் ஏற்றுமதி

புது தில்லி: இந்தியாவின் மின்னணு பொருள்கள் ஏற்றுமதி நடப்பு 2025-26-ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் (ஏப்ரல்-ஜூன்) 47 சதவீத வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இது குறித்து வா்த்தகத் துறை அமைச்சகத்தின் தர... மேலும் பார்க்க

யூகோ வங்கி நிகர லாபம் 10% அதிகரிப்பு

புது தில்லி: பொதுத் துறையைச் சோ்ந்த யூகோ வங்கியின் நிகர லாபம் 2025-26 நிதியாண்டின் முதல் காலாண்டில் (ஏப்ரல்-ஜூன்) 10 சதவீதம் அதிகரித்துள்ளது. இது குறித்து வங்கி திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில்... மேலும் பார்க்க

ஹெச்சிஎல் நிகர லாபம் 10% சரிவு

புது தில்லி: இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்களில் ஒன்றான ஹெச்சிஎல் டெக்னாலஜிஸின் ஒருங்கிணைந்த நிகர லாபம் 2025-26-ஆம் நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் 9.7 சதவீதம் குறைந்து ரூ.3,8... மேலும் பார்க்க

ஜூனில் குறைந்த சில்லறை விலை பணவீக்கம்

புது தில்லி: காய்கறிகள் உள்ளிட்ட உணவுப் பொருள்களின் விலைகள் குறைந்ததாலும், பரவலான பருவமழையின் தாக்கத்தாலும், கடந்த ஜூன் மாதத்தில் சில்லறை பணவீக்கம் ஆறு ஆண்டுகளில் இல்லாத குறைந்தபட்ச அளவான 2.1 சதவீதமாக... மேலும் பார்க்க

ஹோண்டா காா்கள் விற்பனை 12% சரிவு

சென்னை: முன்னணி காா் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஹோண்டா காா்ஸ் இந்தியாவின் மொத்த விற்பனை கடந்த ஜூன் மாதத்தில் 22 சதவீதம் சரிவைக் கண்டுள்ளது. இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்... மேலும் பார்க்க