கூகுள் பிக்சலுக்கு இணையாக ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன்!
20 ஆண்டுகால கால்பந்து பயணம்..! ஸ்பானிஷ் வீரர் நெகிழ்ச்சி!
ஸ்பானிஷ் கால்பந்து வீரர் செர்ஜியோ ராமோஸ் தனது 20 ஆண்டு கால்பந்து பயணம் குறித்து இன்ஸ்டாவில் நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார்.
38 வயதாகும் செர்ஜியோ ராமோஸ் சென்டர்-பேக் பொசிஷனில் விளையாடுவார்.
உலகின் மிகச் சிறந்த டிஃபென்டர் என ரசிகர்களும் வர்ணனையாளர்களும் புகழ்கிறார்கள்.
2010 உலகக் கோப்பை வென்ற ஸ்பானிஷ் அணியில் இருந்தவர். ரியல் மாட்ரிட் அணிக்காக 462 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
ரியல் மாட்ரிட் அணியில் மெஸ்ஸியுடன் சண்டையிட்டதால் மிகவும் புகழ்ப்பெற்றார். பின்னர், பிஎஸ்ஜி அணியில் மெஸ்ஸியுடன் நண்பரானார்
2005 முதல் 2023வரை ஸ்பானிஷ் அணிக்காக விளையாடிய ராமோஸ் தற்போது கிளப் போட்டிகளில் விளையாடி வருகிறார்.
செர்ஜியோ ராமோஸ் ஸ்பானிஷ் அணியில் இணைந்து 20 ஆண்டுகள் ஆனதைக் குறித்து இன்ஸ்டாவில் புகைப்படங்களைப் பதிவிட்டு நெகிழ்ச்சியாக எழுதியுள்ளார்.
அதில் அவர் கூறியதாவது:
20 ஆண்டுகள் ஒன்றுமில்லை எனச் சொல்வார்கள். திரும்பிப் பார்த்தால் நிச்சயமாக எனக்குமே அப்படித்தான் தெரிகிறது. இருப்பினும், நான் நேற்றுதான் ஸ்பானிஷின் ஹெல்மன்டிகோ திடலில் குதித்தது போலிருக்கிறது.
எனது நாட்டுக்காக சிவப்பு நிற ஜெர்ஸி அணிந்து ஸ்பானிஷை பிரதிநிதிப்படுத்தி விளையாடியது என்னுடைய வாழ்வில் மிகவும் கிளர்ச்சியூட்டக்கூடிய ஒன்றாகும். அந்த நினைவுகள் எப்போதும் எனது நெஞ்சில் இருந்து மறையாது.
அநேகமாக 20 ஆண்டுகள் ஒன்றுமில்லை எனலாம். ஆனால், அதுதான் எனக்கு எல்லாமே.
1 உலகக் கோப்பை, 2 ஐரோப்பிய சாம்பியன்ஷிப், 180 போட்டிகள், ஸ்பானிஷுக்காக அதிக போட்டிகள். நன்றி. ஸ்பானிஷ் செல்லுங்கள் என்றார்.