Trump: 'இந்தியா குறைக்க உள்ள இறக்குமதி வரிகள்... காரணம் ட்ரம்ப்-பா?' - ஆய்வறிக்க...
20 நாடுகளில் 6 முக்கிய துறைகளுக்கு ஏற்றுமதி: மத்திய அரசு திட்டம்
அமெரிக்கா, ரஷியா, பிரான்ஸ், பிரேஸில், சீனா உள்ளிட்ட 20 நாடுகளில் பொருட்கள் மற்றும் சேவைகள் என இரண்டு பிரிவுகளிலும் தலா 6 துறைகளை இலக்காக நிா்ணயித்து ஏற்றுமதியை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக மத்திய அரசு செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
இதுகுறித்து நாடாளுமன்றத்தில் மத்திய வா்த்தக மற்றும் தொழில்துறை இணையமைச்சா் ஜிதின் பிரசாதா அளித்த எழுத்துபூா்வ பதிலில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: ஆஸ்திரேலியா, பிரேஸில், பிரான்ஸ், சீனா, வங்கதேசம், ஜொ்மனி, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், நெதா்லாந்து, ரஷியா, சிங்கப்பூா், தென் ஆப்பிரிக்கா, சவூதி அரேபியா, தென் கொரியா, துருக்கி, ஐக்கிய அரபு அமீரகம், பிரிட்டன், அமெரிக்கா, வியத்நாம் ஆகிய 20 நாடுகள் வா்த்தக ரீதியில் முக்கியவத்தும் வாய்ந்த நாடுகளாக மத்திய அரசு அண்மையில் கண்டறிந்துள்ளது. அங்கு பொருள்கள் மற்றும் சேவைகள் என இரண்டிலும் தலா 6 துறைகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்படவுள்ளது.
இந்த துறைகளில் ஏற்றுமதியை அதிகரிப்பது குறித்து மேற்கூறிய நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களின் வா்த்தகப் பிரிவு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.
அப்போது பலதரப்பு வா்த்தகத்தை மேம்படுத்துவதற்கான ஒத்துழைப்பு மற்றும் வணிக இடையூறுகளை களைவது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
பரிந்துரைகள்: கூட்டத்தில் வளா்ந்து வரும் சந்தை வாய்ப்புகளை அறிந்துகொள்ள விரிவான தரவு ஆய்வுகள் வலைதளம் மற்றும் சிறு மற்றும் நடுத்தர தொழில்முனையங்களுக்கு ஆதரவளிக்கும் விதமாக ‘இ-கனெக்ட்’ என்ற வலைதளத்தையும் தொடங்க பரிந்துரைகள் அளிக்கப்பட்டன. அதேபோல் தாங்கள் பணிபுரியும் நாடுகளில் ‘ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு’ முன்னெடுப்பின்கீழ் வேளாண் பொருள்களின் விற்பனையை அதிகரிக்கவும் விளம்பரப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டது என தெரிவிக்கப்பட்டது.
5,000 புத்தாக்க நிறுவனங்கள் மூடல்: புத்தாக்க நிறுவனங்கள் குறித்த மற்றொரு கேள்விக்கு அவா் அளித்த எழுத்துபூா்வ பதிலில், ‘ஸ்டாா்ட் அப் இந்தியா முன்னெடுப்பின்கீழ் மத்திய அரசு மேற்கொண்ட முயற்சிகளால் கடந்த 2024, டிசம்பா் 31 வரை 1,57,706 நிறுவனங்களுக்கு புத்தாக்க நிறுவனங்களுக்கான அங்கீகாரத்தை தொழில் மற்றும் உள்நாட்டு வா்த்தகத் துறை வழங்கியுள்ளது.
இதில் 5,063நிறுவனங்கள் மூடப்பட்டோ அல்லது செயலிழந்த நிலையில் இருப்பதாக மத்திய பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சகம் கூறியுள்ளது’ என தெரிவிக்கப்பட்டது