குளிா் கண்ணாடியில் கேமரா- அயோத்தி கோயிலுக்குள் படமெடுத்தவா் கைது
2024 இப்படித்தான் இருந்தது... நிகிலா விமல் பகிர்ந்த விடியோ!
நடிகை நிகிலா விமல் 2024 ஆம் ஆண்டு குறித்து நகைச்சுவை விடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.
2009 முதல் மலையாளப் படங்களில் நடித்து வருகிறார் நிகிலா விமல். 2016-ல் வெளியான வெற்றிவேல் படம் மூலமாகத் தமிழில் அறிமுகமானார்.
கிடாரி, பஞ்சுமிட்டாய், தம்பி போன்ற படங்களில் நடித்து கவனம் ஈர்த்தவர் மீண்டும் மலையாளத்தில் ஜோ அண்ட் ஜோ, குருவாயூர் அம்பலநடையில் போன்ற படங்களின் மூலம் பிரபலமடைந்தார்.
இதையும் படிக்க: வேள்பாரி பணிகளைத் துவங்கும் ஷங்கர்?
கடந்தாண்டு வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்ற வாழை திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பாராட்டுகளைப் பெற்றிருந்தார்.
இந்த நிலையில், இன்ஸ்டாகிராமில் பிரண்ட்ஸ் படத்தில் நடிகர் வடிவேலு மீண்டும் மீண்டும் வழுக்கிவிழும் நகைச்சுவைக் கானொலியைப் பதிவேற்றிய நிகிலா விமல், ‘2024 இப்படிதான் இருந்தது’ எனப் பதிவிட்டுள்ளார்.