செய்திகள் :

2029 தேர்தலிலும் மோடியே பிரதமர் வேட்பாளர்! பாஜகவின் நிலைப்பாட்டுக்கு ஆர்எஸ்எஸ் பதில் என்ன?

post image

அடுத்த மக்களவைத் தேர்தலிலும் நரேந்திர மோடிதான் பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்படுவார் என்ற பாஜகவின் நிலைப்பாட்டால், ஆர்எஸ்எஸ்ஸுடனான நல்சூழலில் கசப்பு ஏற்பட்டிருப்பதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

அரசியலில் இருப்பவர்களுக்கு 75 வயதானால், அவர்கள் ஓய்வுபெற வேண்டும் என்பது ஆர்எஸ்எஸ் வரையறை. அந்த வகையில், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்துக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் (பாஜக) இந்தாண்டுடன் 75 வயதாகவுள்ளது. ஆகையால், அவர்கள் இருவரும் ஓய்வுபெறுவார்களா? என்ற கேள்வி எழுவதற்கு முன்னதாகவே, தனது ஓய்வை மோகன் பகவத் உறுதிப்படுத்தினார்.

இருப்பினும், பிரதமர் மோடியின் ஓய்வுகுறித்து எதுவும் இன்னும் எட்டப்படவில்லை. இதனிடையே, ஜூலை மாதம் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய மோகன் பகவத், அரசியல் இருப்பவர்களுக்கு 75 வயதானால், மற்றவர்களுக்கு நீங்கள் வழிவிட வேண்டும் என்று தெரிவித்தார்.

இதன்மூலம், பிரதமர் மோடியைத்தான் அவர் மறைமுகமாகக் குறிப்பிடுவதாகக் கருத்துகள் நிலவின.

இந்த நிலையில், 2029 மக்களவைத் தேர்தலிலும் மோடிதான் பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்படுவார் என்று பாஜக திட்டவட்டமாகத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக, ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக இடையிலான நல்சூழலில் கசப்பு ஏற்பட்டிருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும், இரு தரப்புக்கும் இடையிலான நிலைப்பாட்டை கனிவாக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதனிடையேதான், இன்றைய சுதந்திர நாள் கொண்டாட்டத்தில் ஆர்எஸ்எஸ் குறித்தும் பிரதமர் மோடி சில உரைகளை ஆற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக பாஜகவின் வளர்ச்சிக்கு கடுமையாக உழைத்தவர் இல.கணேசன்: மோடி இரங்கல்

பாஜவை தமிழகம் முழுவதும் வளர்க்க கடுமையாக உழைத்தவர் இல.கணேசன் என பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான தமிழகத்தைச் சேர்ந்தஇல.கணேசன், நாகாலாந்து ஆளுநராகவும் பணியாற்றி வந்த... மேலும் பார்க்க

ஹுமாயூன் கல்லறை வளாகத்தில் மேற்கூரை இடிந்து 5 பேர் பலி!

தில்லியில் ஹுமாயூன் கல்லறை வளாகத்தில் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 5 பேர் பரிதாபமாக பலியாகினர். தில்லியின் நிஜாமுதீன் பகுதியில் உள்ள முகலாய மன்னரான ஹுமாயூனின் கல்லறை வளாகத்தில் வெள்ளிக்கிழமை பிற... மேலும் பார்க்க

நாகாலாந்து ஆளுநர் இல. கணேசன் காலமானார்!

நாகாலாந்து மாநில ஆளுநர் இல.கணேசன் காலமானார். அவருக்கு வயது 80.பாஜக மூத்த தலைவரும் நாகாலாந்து ஆளுநருமான இல. கணேசன், சென்னையில் உள்ள அவரது வீட்டில் கடந்த ஆகஸ்ட் 8 ஆம் தேதி நிலை தடுமாறி கீழே விழுந்ததில் ... மேலும் பார்க்க

வாகா எல்லையில் தேசியக் கொடி இறக்கும் நிகழ்ச்சி! வீறுநடை போட்ட ராணுவ வீரர்கள்!

இந்தியா - பாகிஸ்தான் எல்லைப் பகுதியான அட்டாரி - வாகா எல்லையில் தேசியக் கொடியிறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.பஞ்சாப் மாநிலத்தில் இந்தியா - பாகிஸ்தான் எல்லைப்பகுதி அமைந்துள்ளது. இந்தியாவின் அடாரி மற்றும் ... மேலும் பார்க்க

ஹுமாயூன் கல்லறை வளாக கூரை இடிந்து விபத்து: உள்ளே சிக்கிய 8 பேரின் கதி என்ன?

தில்லியில் ஹுமாயூன் கல்லறை வளாகத்தில் கூரையின் ஒரு பகுதி வெள்ளிக்கிழமை இடிந்து விழுந்தது. தில்லியின் நிஜாமுதீன் பகுதியில் உள்ள ஹுமாயூனின் கல்லறையின் ஒரு குவிமாடம் வெள்ளிக்கிழமை மாலையில் இடிந்து விழுந்... மேலும் பார்க்க

இந்திரா காந்தியின் சாதனையை முறியடித்த மோடி!

தொடர்ச்சியாக 12 முறை சுதந்திர தின உரையாற்றி இந்திரா காந்தியின் சாதனையை பிரதமர் மோடி முறியடித்துள்ளார்.நாடு முழுவதும் சுதந்திர நாள் இன்று (ஆக.15) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.தேசியத் தலைநகா் தில்லியில் ... மேலும் பார்க்க