21 வயதில் கேப்டன்..! இங்கிலாந்து வீரர் ஜேக்கப் பெத்தேலுக்கு ‘ஜாக்பாட்’.!
தைலாபுரம் தோட்டத்துக்கு அன்புமணி ராமதாஸ் வருகை! ஏன்?
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தைலாபுரம் தோட்டத்துக்கு வருகை தந்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பாமக நிறுவனர் ராமதாஸின் மனைவியும் தனது தாயாருமான சரஸ்வதியின் பிறந்தநாளையொட்டி, அவரை சந்திப்பதற்காக தைலாபுரம் தோட்டத்துக்கு அன்புமணி ராமதாஸ் வருகை புரிந்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஆகஸ்ட் 17 ஆம் தேதியில் ராமதாஸ் தரப்பில் பொதுக்குழு நடைபெறவுள்ள நிலையில், இன்று அன்புமணி ராமதாஸின் வருகை அரசியல் களத்தில் பேசுபொருளாகியுள்ளது.
கட்சி நிறுவனர் ராமதாஸுக்கும், கட்சித் தலைவரும் அவரது மகனுமான அன்புமணி ராமதாஸுக்கும் இடையில் சமீபகாலமாக கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ள நிலையில், அன்புமணி ராமதாஸின் வருகை கேள்வியை எழுப்பியுள்ளது.