செய்திகள் :

பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் காலமானார்! `அரசு ஊழியர் - பாஜக- ஆளுநர்' அவரது அரசியல் வாழ்க்கைப் பயணம்!

post image

நா​காலாந்து மாநில ஆளுநரும், பாஜகவில் மூத்த தலைவராக இருந்தவருமான இல.கணேசன் தனது 80வது வயதில் இன்று மாலை காலமானார். 

பாஜகவில் மூத்த தலைவரான இல.கணேசன், சமீபத்தில் சென்னை வந்திருந்தபோது தலையில் அடிபட்டு, மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்தார். இந்நிலையில் திடீரென இன்று மாலை காலமாகியிருக்கிறார்.

இல.கணேசன்

இல.கணேசன்: `அரசு ஊழியர் டு மணிப்பூர் ஆளுநர்' - அரசியல் பயணம் ஒரு பார்வை!

இல. கணேசன் வாழ்க்கைப் பயணம்

பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ்-ஐ தமிழகத்தில் காலூன்றச் செய்தவர்களில் இல.கணேசன் மிக முக்கியமானவராகப் பார்க்கப்படுகிறார். தஞ்சாவூரில் பத்திரிகை முகவருக்கு மகனாகப் பிறந்து, சிறுவயதிலேயே ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் தன்னை இணைத்துக்கொண்டு முழு நேர அரசியலில் இறங்கினார். மதுரை, ராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி மண்டலப் பொறுப்பாளர், குமரி முதல் திருச்சி வரையிலான மாவட்டங்களின் பொறுப்பாளர், தமிழ்நாடு மாநில இணை அமைப்பாளர் என இல.கணேசன் படிப்படியாகத் தமிழகத்தில் பாஜகவின் முகமாக மாறினார்.

ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் தனது பயணத்தைத் தொடங்கிய இல.கணேசன் 1991-ல் பாஜக-வின் தேசிய செயற்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டார். பின்னர், விரைவிலேயே மாநில தலைவர் பதவிக்கு நிகரான மாநில அமைப்புச் செயலாளர் பதவி கட்சித் தலைமையால் வழங்கப்பட்டது.

அரசு ஊழியர் டு பாஜக தொண்டர்

1970-ல் திருச்சியில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ் கூட்டத்தில், அப்போதைய ஆர்.எஸ்.எஸ் மாநில அமைப்பாளர் ராமகோபாலன் முன்னிலையில், அரசு வேலையை விட்டு விட்டு ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் முழு நேரப் பிரசாரகராக இணைந்தார். அதைத்தொடர்ந்து, திருமணம் செய்துகொள்ளாமல் ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்காகவும், பாஜக-விற்காகவும் தன்னை அர்ப்பணித்துக்கொண்டு பொது வாழ்வில் இறங்கினார். 

இல.கணேசன்

ஆளுநர் இல. கணேசன்

30 ஆண்டுகளாக பாஜக செயற்குழு உறுப்பினராக இருந்து வரும் இல.கணேசன் அக்கட்சியின் தேசிய தலைவராகவும், தேசிய துணைத் தலைவராகவும், தமிழக தலைவராகவும் பதவி வகித்திருக்கிறார். 2009 மற்றும் 2014 ஆகிய நாடாளுமன்றத் தேர்தல்களில் பாஜக சார்பாகத் தென் சென்னை தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார். இருப்பினும், பின்னர் மத்தியப் பிரதேச மாநிலத்தின் சார்பாக மாநிலங்களவை உறுப்பினராக இவரை பாஜக தேர்வு செய்து எம்.பி என்ற அந்தஸ்தை வழங்கி சிறப்பித்தது.

திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி, கம்யூனிஸ்ட் கட்சியின் சங்கரய்யா மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் என அனைவருடனும் அரசியலுக்கு அப்பாற்பட்டு அன்புடன் பழகக் கூடியவர். 

இல.கணேசன்

பாஜகவில் மூத்த தலைவராக பல ஆண்டுகள் பணி செய்து வந்த இல.கணேசனை கடந்த 2021 ஆம் ஆண்டு மணிப்பூர் மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். பின்னர் மேற்கு வங்கத்திற்கும் ஆளுநர் பொறுப்பை கூடுதலாக கவனித்து வந்தார். பின்னர், 2023 ஆம் ஆண்டு நாகலாந்து மாநிலத்திற்கு ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

80 வயதைத் தொட்டிருக்கும் அவர், இப்போது உடல்நலக் குறைவால் இன்று மாலை காலமாகியிருக்கிறார். பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் அவரது இறப்பிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

"தமிழ்நாட்டில் பிஜேபி-யின் வளர்ச்சிக்காக உழைத்தவர்" - இல.கணேசன் மறைவு குறித்து பிரதமர் மோடி

நா​காலாந்து மாநில ஆளுநரும், பாஜகவில் மூத்த தலைவராக இருந்தவருமான இல.கணேசன், தனது 80வது வயதில் இன்று மாலை உடல்நலக் குறைவால் காலமானார்.திருமணமே செய்துகொள்ளாமல், அரசு வேலையை விட்டுவிட்டு ஆர்.எஸ்.எஸ் இயக்க... மேலும் பார்க்க

"எனது உரையை அவரது இதழில் வெளியிட்டவர்" - இல.கணேசன் குறித்து திருமா உருக்கம்

நா​காலாந்து மாநில ஆளுநரும், பாஜகவில் மூத்த தலைவராக இருந்தவருமான இல.கணேசன், தனது 80வது வயதில் இன்று மாலை உடல்நலக் குறைவால் காலமானார்.திருமணமே செய்துகொள்ளாமல், அரசு வேலையை விட்டுவிட்டு ஆர்.எஸ்.எஸ் இயக்க... மேலும் பார்க்க

`நாய் கடித்ததும் சோப்பு வைத்து கழுவினாலே ரேபிஸ் வைரஸ் இறந்துவிடும்'- அம்பிகா சுக்லா சர்ச்சை கருத்து

டெல்லியில் 6 வயது குழந்தை தெரு நாய் கடித்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. டெல்லியில் தெரு நாய்கள் பிரச்சினை நீண்ட காலமாக விவாதிக்கப்பட்டது. அதிகரித்து வரும் நாய்க்கடி மற்று... மேலும் பார்க்க

சித்தர்காடு: அரிசி ஆலையால் இன்னல்படும் மக்கள்; காற்றில் பறக்கும் நீதிமன்ற உத்தரவு - என்ன நடக்கிறது?!

மயிலாடுதுறை மாவட்டம், சித்தர்காடு பகுதியில் இயங்கி வரும் நவீன அரிசி ஆலை 1972 ல் தொடங்கபட்டது. இம்மாவட்டம் டெல்டா சார்ந்த பகுதி என்பதால் அரிசி ஆலை அவ்விடத்தில் அமைவு பெற்றது. சுற்றுவட்டாரப் பகுதியில் இ... மேலும் பார்க்க

China: சீன அரசு திட்டமிட்டிருக்கும் பிரமாண்ட ரயில் திட்டம்; இந்தியாவிற்கு ஏற்படும் சிக்கல் என்ன?

பிரமாண்டமான ரயில் பாதை திட்டத்தைச் செயல்படுத்த சீன அரசு முடிவுசெய்திருக்கிறது. இது, சீனாவின் மிகப்பெரிய கனவு ரயில் திட்டங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. சீனாவின் ஜின்ஜியாங்கில் உள்ள ஹோடானை, தன் கட்டுப... மேலும் பார்க்க