செய்திகள் :

டிரம்ப்புக்கு நோபல் வழங்க பரிந்துரை! கிளிண்டன் பேச்சால் குழப்பம்!

post image

உக்ரைன் போரை நிறுத்தினால், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு நோபல் வழங்க பரிந்துரைப்பதாக ஹிலாரி கிளிண்டன் கூறியிருப்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரஷியா - உக்ரைன் இடையேயான போரை முடிவுக்குக் கொண்டுவர பல்வேறு நாடுகள் பல்வேறு முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றன. போரை நிறுத்தும் முயற்சியில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். போர்நிறுத்தப் பேச்சுவார்த்தைக்காக நீண்டகாலமாக ரஷிய அதிபர் விளாதிமீர் புதினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டும், அவர் ஒத்துழைக்கவில்லை.

இந்த நிலையில், டிரம்ப்பும் புதினும் தற்போது அலாஸ்காவில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், முன்னர்வரையில் போர்நிறுத்தத்துக்கான பேச்சுவார்த்தைதான் என்று கருதப்பட்ட நிலையில், இன்றைய பேச்சுவார்த்தையில் உக்ரைன் குறித்து எதுவும் பேசப்போவதில்லை என்று டிரம்ப் கூறியது குழப்பத்தை ஏற்படுத்தியது.

இந்த குழப்பங்களுக்கிடையே, ரஷியா - உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வந்தால், நோபல் பரிசுக்கு டிரம்ப்பின் பரிந்துரை செய்வேன் என்று ஹிலாரி கிளிண்டன் கூறியிருப்பது மேலும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

2016 ஆம் ஆண்டில் அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப்புக்கு (குடியரசுக் கட்சி) எதிராகப் போட்டியிட்டவர் கிளிண்டன் (ஜனநாயகக் கட்சி). ஆனால், அவரே டிரம்ப்பின் பெயரை நோபல் பரிசுக்கு பரிந்துரை செய்வது என்பது வியக்கத்தக்கதுதான்.

இதுகுறித்து அவர் கூறுகையில்,

உக்ரைன் போரை டிரம்ப் முடிவுக்குக் கொண்டுவந்தால், அவருக்கு நோபல் வழங்க நானே பரிந்துரை செய்வேன். போரை முடிவுக்குக் கொண்டுவர சரியான தருணம் இதுதான். இனிமேல், அங்கு ஒரு குண்டு சத்தம்கூட கேட்கக் கூடாது என்று தெரிவித்தார்.

பல்வேறு போர்களை நிறுத்தியதாகக் கூறிவரும் டிரம்ப், தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என்று கிடைக்கும் மேடைகளிலெல்லாம் வலியுறுத்தி வருகிறார்.

அதுமட்டுமின்றி, டிரம்ப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என்று இஸ்ரேல் மற்றும் பாகிஸ்தானும் வலியுறுத்தி வருகிறது (வலியுறுத்தும் இவர்கள் இருவரும் உலகில் ஆகப்பெரும் அமைதியை நிலைநாட்டுபவர்கள் என்று நீங்கள் நினைத்தல் கூடாது).

அவர்கள்போலவே, டிரம்ப்புக்கு நோபல் வழங்க நோபல் குழுவுக்கு ஒரு கூட்டு முறையீட்டை அளிக்க அஜர்பைஜானும் ஆர்மீனியாவும் முன்வந்துள்ளனர்.

Hillary Clinton says she would nominate Trump for Nobel Peace Prize

டிரம்ப்பின் வரிவிதிப்பால் அமெரிக்காவுக்கே சிக்கல்! மற்றைய நாடுகளின் கரன்சி மதிப்பு உயர்வு!

அமெரிக்கா டாலர் மதிப்பைவிட ஜப்பான், இங்கிலாந்து கரன்சி மதிப்பு வளர்ச்சியடைந்துள்ளது.அமெரிக்காவின் மீது பல்வேறு நாடுகளும் அதிக வரி விதிப்பதாகக் கூறி, அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் பரஸ்பர வரியை அறிவ... மேலும் பார்க்க

சுதந்திர நாள் கொண்டாட்டத்தில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் போராட்டம்!

ஆஸ்திரேலியாவின் மெல்பர்னில் இந்தியாவின் சுதந்திர தின கொண்டாட்டங்களை சீர்குழைக்கும் விதமாக காலிஸ்தான் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சீக்கிய மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு... மேலும் பார்க்க

இந்தியா மீதான வரியே புதின் பேச்சுக்கு வரக் காரணம்! டிரம்ப்

இந்தியா மீதான வரி விதிப்பே ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் பேச்சுவார்த்தைக்கு முன்வரக் காரணம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.உக்ரைன் - ரஷியா இடையேயான போரை நிறுத்துவது தொடர்பாக, ... மேலும் பார்க்க

சுதந்திர தின கொண்டாட்டம்: பாகிஸ்தானில் 3 போ் உயிரிழப்பு

பாகிஸ்தானின் கராச்சி நகரில் சுதந்திர தினக் கொண்டாட்டத்தின்போதுசிலா் கண்மூடித்தனமாக வானை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 8 வயது சிறுமி, முதியவா் உள்பட 3 போ் உயிரிழந்தனா்; சுமாா் 60 போ் காயமடைந்த... மேலும் பார்க்க

இந்தியாவுடன் நேரடி விமான சேவைக்கு பேச்சுவாா்த்தை: சீனா தகவல்

இந்தியாவுடன் நேரடி விமான சேவையை மீண்டும் தொடங்குவது குறித்து பேச்சு நடத்தி வருவதாக சீனா தெரிவித்துள்ளது. கடந்த 2020-ஆம் ஆண்டு கிழக்கு லடாக் எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியா-சீனா ராணுவத்தி... மேலும் பார்க்க

கேரள செவிலியரின் உயிருக்கு உடனடி அச்சுறுத்தல் இல்லை: உச்சநீதிமன்றத்தில் வழக்குரைகள் குழு

யேமனில் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்திய செவிலியா் நிமிஷா பிரியாவின் உயிருக்கு உடனடி அச்சுறுத்தல் இல்லை என அவா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா்கள் குழு உச்சநீதிமன்றத... மேலும் பார்க்க